தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி மேலாண்மை திட்ட (COASTAL ZONE MANAGEMENT PLAN) வரை படத்திற்கான பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் (PUBLIC HEARING) டிசம்பர் 10, 2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கடற்கரை கட்டுப்பாடு பகுதி (COASTAL REGULATION ZONE - CRZ) விதிமுறைகள் 2011 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, உயரலைக்கோட்டுடன் 1:25000 விகிதாசாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை பகுதியின் மேலாண்மை திட்ட வரைப்படங்கள் (எண் 25,26,27 மற்றும் 28), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 1 (கூர்நுட்பமான பகுதி), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 2 (போதுமான வளர்ச்சி அடைந்த பகுதி), கடற்கரை கட்டுப்பாட்டு பகுதி 3 (வளர்ச்சியடையாத பகுதி) இடங்களில் அடங்கியுள்ள புல எண்களுடன், கூடிய விபரங்கள் - காயல்பட்டினம் நகராட்சி உட்பட, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து உள்ளாட்சி மன்றங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பியுள்ள ஆவணங்கள் வருமாறு:
மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் குறித்த அறிவிப்பு
வரைப்படங்கள் திட்டச்சுருக்கம் (ஆங்கிலம்)
வரைப்படங்கள் திட்டச்சுருக்கம் (தமிழ்)
வருவாய் கிராமங்கள் வாரியாக CRZ விதிமுறைக்கு உட்பட்ட புல எண்கள்
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி மேலாண்மை திட்ட வரைபடங்கள்
தகவல்:
ஐ. ஆபிதா சேக்,
நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி. |