உறுப்பினர்களின் விருப்பத்தைத் தெரிந்துகொண்ட பின், கொடைக்கானலுக்கு 3 நாட்கள் சுற்றுலா செல்ல காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
உறுப்பினர்களின் விருப்பத்தை தெரிந்து கொண்டபின் மூன்று நாட்கள் கொடைக்கானல் பிக்னிக்: கே.சி.ஜி.சி. செய்தி வெளியீடு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (கே.சி.ஜி.சி.) அதன் உறுப்பினர்களுக்காக ஆண்டு தோறும் இரண்டு முதல் மூன்று சிற்றுலாக்கள் (பிக்னிக்) ஏற்பாடு செய்து வருகிறது. உறுப்பினர்களுக்கிடையேயும் அவர்கள் குடும்பத்தவர்களுக்கிடையேயும் உறவையும் நெருக்கத்தையும் வலுப்படுத்தவும் வருடம் முழுதும் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வீட்டு வேலைகளை முழுமையாக செய்து கொண்டு தத்தமது குடும்ப ஆண்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்துவரும் இல்லத்தரசிகளுக்கு ஓய்வளித்து வெளியே செல்வதற்காகவும் இச்சிற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை அதுபோன்ற சிற்றுலாக்களுக்கு சென்னை மற்றும் அதன் புறநகரில் உள்ள தோப்புகளுக்கு காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் வகையில் அழைத்துச் சென்று வரப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு வெளியே சென்று குறைந்தது இரண்டு நாட்களாவது தங்கி வரும் வகையில் சிற்றுலா ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற உறுப்பினர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிடும் வகையில் இன்ஷாஅல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 11-ந்தேதி இரவு 9 மணிக்கு துவங்கி மூன்று நாட்கள் பயணமாக கொடக்கானல் செல்வதெனவும் 14-ந்தேதி மாலை 5 மணிக்கு அங்கிருந்து சென்னை திரும்புவது எனவும் கே.சி.ஜி.சி.யின் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்பயணத்திற்கான பயணச்செலவு, தங்கும் வசதி, உணவு ஆகிய செலவுகளுக்காக நபர் ஒருவருக்கு ரூ.3000/- (மூவாயிரம் ரூபாய்) கட்டணமாக வசூலிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சிற்றுலாவில் இணைய விரும்பும் கே.சி.ஜி.சி. உறுப்பினர்கள் வரும் 21-ந்தேதி வியாழக்கிழமை இரவு 9 மணிக்குள் ரூ.500/- முன்பணம் செலுத்தி கீழ்கண்ட செல்பேசிகளுக்கு தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்யுமாறு இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
செல்பேசி எண்கள்:
98401 84838 (குளம் முஹம்மத் தம்பி)
93828 08007 (சொளுக்கு முஹம்மத் நூஹு)
97910 14298 (கிதுரு முஹம்மது)
குறிப்பிட்ட தேதிக்குள் பெயர்பதிவு செய்வதன் மூலம் தேவையான எண்ணிக்கையை அடைந்தால் மட்டுமே இச்சிற்றுலாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். வஸ்ஸலாம்.
இவ்வாறு, KCGC அமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |