காயல்பட்டினத்தில் நேற்று மாலை 05.30 மணியிலிருந்து மழை மேகங்கள் சேரத் துவங்கின. இரவு வேளை துவங்கியதும் மின்னல் அவ்வப்போது பளிச்சிட்டவண்ணம் இருந்தது.
இரவு 11.30 மணிக்கு பெருந்துளிகளுடன் விட்டு விட்டு சில நிமிடங்கள் மழை பெய்தது. இன்று நள்ளிரவு 00.15 மணியளவில் பெரும் கனமழையாக அது உருவெடுத்து, 00.45 மணி வரை கொட்டித் தீர்த்தது. பின்னர் அவ்வப்போது விட்டுவிட்டு விடியற்காலை வரை மழை பெய்தது. இம்மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று நள்ளிரவில் பெய்த மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வீடுகளையொட்டி கட்டப்பட்டுள்ள கழிவுநீர்த்தொட்டி (செப்டிக் டேங்க்) பகுதிகளில் மண் சரிந்து பெரும்பள்ளமாகக் காட்சியளிக்கிறது.
சித்தன் தெருவிலுள்ள ஒரு வீட்டின் கழிவு நீர்த்தொட்டி மண் சரிவால் சிதைந்துள்ள காட்சி:
நீரில் மிதக்கும் தெருக்கள் ... கூடவே குளக்கரைக்கு அருகில் இருக்கும் எனது வீட்டை பார்த்ததிலும் மகிழ்ச்சி . படம் பிடித்த கூட்டாளி ஹிஜாஸ் மைந்தனுக்கு நன்றி.
Vilack SMA, ஹேதாங், ஜியான்க்மேன், சீன மக்கள் குடியரசு.
அருமை நண்பா..... ஹிஜாஸ் மைந்தன் அவர்களே ..நமது ஊரை ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள் படு சூப்பர்....நானும் ஒன்றாக தங்களுடன் பைக்கில் நமது ஊரை வலம் வந்தது போன்றே எம் மனதில் தோன்றுகிறது.....
நண்பா தங்களின் கேமராவின் கைவண்ணம் என்னவோ ....அனைத்தும் அற்புதமே .........
மாஷா அல்லாஹ். நமது ஊருக்கு நல்ல மழையை தந்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் .......இந்த சிறப்பான மழையின் பலனால் நமது ஊர் நில மண் அடிவாரங்களில் மலை நீரின் தாக்கம் அதிகரித்து நம் கிணறுகளில் நீரின் வரத்து அதிகரித்து ....நாம் யாவர்களும் நலன் பெறவும் ....நம் ஊர் அனைத்து மக்களும் / நமது ஊரின் சுற்று பகுதி அனைத்து மக்களும் நோய் நொடியற்ற மன நிம்மதியான ஒற்றுமையுடன் கலந்த நல் வாழ்வையும் வல்ல நாயன் தந்து அருள்வானாகவும் ஆமீன்............
நமது ஊர் அனைத்து ஜும்மாவிலும் நாம் அனைவர்களும் மனம் விட்டு கேட்ட துவாவை ..... கபுலக்கி தந்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் ...........
>>>> நமது ஏக்கம்....கலந்த....தாகம்...தீர்ந்ததே ...அல்ஹம்துலில்லாஹ்<<<<
3. அன்று முதல் இன்று வரை posted bymohamed omar (Chennai)[19 November 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 31562
அஸ்ஸலாமு அலைக்கும்
ஊரை பார்பதற்கு சந்தோசமாக இருக்கின்றது, ஆனால் நான் சிறுவனாக இருக்கும் பொழுது எங்கு எல்லாம் தண்ணீர் தேன்கியதோ அங்கெல்லாம் இன்றும் தேங்கி கொண்டிருக்கின்றது.
என் சிறு வயதில் மழை பெய்ந்து தண்ணீர் தேங்கிவிட்டால் வெளியில் விளையாட விட மாட்டார்கள். அது ஒரு ஏக்கமாக இருக்கும். இன்றும் அதே நிலை தான் எத்தனையோ வீடுகளில்.இன்றும் ஏங்கிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்.
இந்த குறையை போக்க kayalpatnam.com நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்குமே.
நாங்கள் அருகில் இல்லை, தொலைவில் இருந்தாலும் எங்களால் இயன்றதை முயல்வோம்.
4. Re:...Why always neglect our street. posted byS.A.Shaik Mohamed. (Dubai)[19 November 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31567
Assalamaualaikum.
We thank Almighty Allah for his rahmath to our town. Whenever the rain comes to our Town he took some specific street photos only. He never took photo of my street Periya nesavoo street. Nowadays every body using our street as one way. We want to see super scenery of our street with your professional camera.
6. Re:... posted byabbas saibudeen (dubai)[20 November 2013] IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31572
who ever taking all the time of kayal rain views.........again remainder you.....pls no more partiality.........take some nice photo;s(public relations) to approach the problems and express to clear those problems by with this news photo.inshaallah.........that photo must be give a location (whole kayal town)to clear a problems.pls help our municipality.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross