காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளியருகில் இயங்கி வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில், வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18, 19 தேதிகளில் மீலாதுந்நபி விழா நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
பேரன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பறக்காத்தஹு..,
எமது ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் வருடாந்திர நிர்வாகிகள் கூட்டம் கடந்த 08.11.2013,வெள்ளிக்கிழமை அசருக்குப்பின் சென்னை,மண்ணடி,ஈத்காபள்ளி சமீபம்,சுல்தான் தெருவில் உள்ள மூத்த உறுப்பினர் ஹாஜி,பாலப்பா,ஏ.கே.முஹம்மது யாசின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
ஹாஜி,பாலப்பா,ஏ.கே.முஹம்மது யாசின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி,தோல்ஷாப்,எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்து அனைவரையும் வரவேற்றதோடு, அமைப்பின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக வெளியூர்,வெளிநாடுகளிலுள்ள அமைப்பின் நிர்வாகிகளிடம் அலைபேசிகள் மூலம் கருத்துக்கள் கேட்டும் அவைகளையும் பரிசீலிக்கப்பட்டது.
அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணலெம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்ததின மீலாது பெருவிழா மற்றும் பேரியத்தின் 30-ஆம் ஆண்டு விழாவை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2014-ஜனவரி-18,19-(ஹிஜ்ரி-1435,ரபியுல்அவ்வல் பிறை-15,16) சனி மற்றும் ஞாயிறு இருதினங்கள் கீழ்காணும் நிகழ்ச்சி நிரல் படி நனிசிறப்புடன் நடாத்திட ஒருமனதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:-
பேச்சுப்போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம்பரிசு ரூபாய் 1000/-,இரண்டாம்பரிசு ரூபாய்,750/-மூன்றாம்பரிசு ரூபாய்,500/-
ஹிஃப்ழ் போட்டிக்கான பரிசு தொகையாக முதலாம்பரிசு ரூபாய் 1500/-இரண்டாம்பரிசு ரூபாய் 1250/-மூன்றாம்பரிசு ரூபாய்,1000/-
மற்றும் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசு தொகைகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது.
இனிய இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர்,நாஞ்சில்,எம்.அப்துஸ்ஸமது அவர்கள்,இ.யூ.முஸ்லிம் லீக் கட்சி தமிழ் மாநில பொதுச்செயலாளர் ஹாஜி,கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சி அகில இந்திய பொதுச்செயலாளரும் தமிழ் மாநிலத்தலைவருமான மரியாதைக்குரிய நாவலர்,பேராசிரியர் ஹாஜி,கே.எம்.காதர் முஹியத்தீன் அவர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மரியாதைக்குரிய இவர்களிடம் தொடர்பு கொண்டு முழு சம்மதமும் பெறப்பட்டது.
முத்தான முதல் நாள்:18-01-2014,சனிக்கிழமை,
---------------------------------------------------------------------------
காலை,9-30 மணி, பூமான் நபியின் புகழ் கூறும் புனித மவ்லிது மஜ்லிஸ்.
மாலை 04-30 மணி, இளம் மாணவர்களுக்கான இனிய சன்மார்க்க பேச்சுப்போட்டி.
இரவு 07-00 மணி முதல் நாடறிந்த நாவுக்கரசர்,சொல்லின் செல்வர், பேராசிரியர்,நாஞ்சில்,எம்.அப்துஸ்ஸமது அவர்கள் தலைமையில் செம்மொழியாம் இனிய தமிழ் மொழியில் இஸ்லாமிய சன்மார்க்க விழிப்புணர்வூட்டும் சுவைமிகு "சுழலும் சொல்லரங்க" மஜ்லிஸ்.
இறுதியில் பாத்திஹா துஆவுடன் முதல் நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெறும்,
இனியதோர் இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை.
-----------------------------------------------------------------------------------
காலை 07: 00 மணி,சுன்னத் எனும் கத்னா வைபவம்.
காலை 09-30 மணி, இளம் ஹாபிழ்களுக்கான இனிய ஹிஃப்ழ் போட்டி.
மாலை 04-30 மணி,சன்மார்க்க அறிஞர் பெருமக்களின் சீருரைகள்.
இரவு 07-00 மணி முதல் சன்மார்க்க சிறப்பு நிகழ்ச்சி.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் ஹாஜி,கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வாழ்த்துரை சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் தமிழ் மாநிலத்தலைவருமான மரியாதைக்குரிய நாவலர் பேராசிரியர் ஹாஜி,கே.எம்.காதர் முஹியதீன் அவர்களின் சன்மார்க்க சிறப்புச்சொற்பொழிவு மஜ்லிஸ். பின்னர் பேச்சுப்போட்டி மற்றும் ஹிஃப்ழ் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிப்புமிகு பரிசளிப்பு நிகழ்ச்சியும், பாத்திஹா துஆ ஸலவாத்துடன் இப்புனிதமிகு நிகழ்வு இனிதே நிறைவு பெறும், இன்ஷாஅல்லாஹ்.
விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இப்பொழுதிலிருந்தே துவக்கி சிறப்புற செய்திடவும் நிகழ்ச்சி நோட்டீஸ் விழா விரைவில் வெளியிடவும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.மேலும் வெளிநாடுகளிலிருந்து நல்லமுறையில் நல்லாதரவுகள் தொடர்ந்து நல்கி வரும் பேரியத்தின் நிர்வாக குழுவினர்களான
சிங்கப்பூர்--பொறியாளர்கள்,ஹாஜி,எம்.எம்.மொஹ்தூம் முஹம்மது,ஹாஜி,எம்.ஏ.கே.ஷேக்னா லெப்பை,
ஹாங்காங்--ஹாஜி,எம்.ஏ.கே.அப்துல் பத்தாஹ்,(அர்.எஸ்)
பாங்காங்--ஜனாப்,வி.எஸ்.எஸ்.பஜுல் கரீம்,
அரபு அமீரகம் --ஜனாப்,எஸ்.எம்.டி.முஹம்மது ஹசன்,
கத்தார்--ஹாஜி,கே.எஸ்.டி.முஹம்மது அஸ்லம்,
குவைத்--ஜனாப்,எஸ்.எம்.டி.மொஹ்தூம் முஹம்மது.
ஜித்தா--ஹாஜி,எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி,
புனிதமக்கா--ஹாஜி,வி.எம்.டி.முஹம்மது அலி (வி.பி)
மற்றும் ஆர்வலர்கள்,உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நல்லாதரவும்,ஆலோசனைகளும் வழங்கி வரும் உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நல்லுள்ளம் கொண்ட தயாளர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தும் இதுபோல் தொடர்ந்து தங்களது பங்களிப்பை தாராளமாக செய்வதுடன் இனிய இவ்விழாவில் கலந்து சிறப்பித்து தருமாறும் மிக்க அன்புடன் வேண்டி விரும்பி அழைக்கின்றோம்.
ஜனாப்,பாலப்பா,எம்.எஸ்.கே.முஹம்மது இப்றாஹீம் நிறைவாக நன்றி நவில ஹாஜி,தோல்ஷாப்,எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாத்திஹா துஆ ஸலவாத்துடன் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ். கூட்ட ஏற்பாடுகளை ஜனாப்,பாலப்பா,ஏ.கே.மெய்தீன் அப்துல் காதிர் சிறப்புற செய்திருந்தார்.
தொடர்ந்து 14-11-2013 வியாழன் மாலை இ.யூ.முஸ்லிம் லீக் கட்சி தமிழ் மாநில தலைமையகத்தில் மாநில பொதுச்செயலாளர் ஹாஜி,கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளரும் தமிழ் மாநிலத்தலைவருமான மரியாதைக்குரிய பேராசிரியர் ஹாஜி,கே.எம்.காதர் முஹியத்தீன் அவர்களையும் எங்கள் பேரிய நிர்வாகிகள் ஹாஜி,தோல்ஷாப்,எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஜனாப்,பாலப்பா,ஏ.கே.மெய்தீன் அப்துல் காதிர் ஆகியோர் சந்தித்து நடைபெற்ற இந்த கூட்ட நடப்புகளை பரிமாறி பொன்னாடை போர்த்தி மீண்டும் அழைப்பு விடுத்து கொண்டார்கள். இந்நிகழ்வில் இக்கட்சியின் துணை செயலாளர் ஜனாப்,மக்கி இபுராஹிம் வரவேற்றுகொண்டார்.
சென்னையில் நடந்த இதே நாளில் 08-11-2013 வெள்ளி ஜும்மாவிற்கு பின் புனிதமிகு மதீனா நகரில் புண்ணியம் பூத்து குலுங்கும் புகழ்மிகு மஸ்ஜிதுன் நபவியின் மேல் தளத்தில் வைத்து நிர்வாக உறுப்பினர்களின் சிறு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.இதில் ஹாஜி,சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான், ஹாஜி,விளக்கு,எம்.டி.முஹம்மது அலி (VP)மற்றும் ஹாஜி,சட்னி,எஸ்.எ.கே.முஹம்மது உமர் ஒலி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பேரியத்தின் 30-ஆவது ஆண்டு விழாவை இன்ஷா அல்லாஹ் மிகவிமரிசையாக நடத்திட முழு ஒத்துழைப்பு நல்கிடவும், தொடர்ந்து எங்களுக்கு நல்லாதரவு அளித்து வரும் ஜித்தா மற்றும் சவுதியில் வாழ் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.ஜசாக்கல்லாஹ் ஹைரா.
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நல் துஆ பொருட்டால் அன்னாரின் பிறந்த நாள் பெருவிழாவை மிக விமரிசையாக நடாத்திடவும் இதற்காக வேண்டி எல்லா வகைகளிலும் வழிகளிலும் உதவியும் உபகாரமும் செய்கின்ற அனைவருக்கும் இரு உலகிலும் நல்ரஹ்மத்தும் பறகக்கத்தும் செய்தருள்வானாக ஆமீன்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சட்னி S.A.K.செய்யித் மீரான் ஜித்தா
பாலப்பா,எம்.எஸ்.கே.முஹம்மது இபுராஹிம் சென்னை |