நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதியன்று உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில், சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் 13, 14, 15, 16.11.2013 (புதன், வியாழன், வெள்ளி, சனி) ஆகிய நாட்களில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இம்முகாம் இன்னும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, சர்க்கரை நோய் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, காயல்பட்டினம் ஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடியைச் சேர்ந்த சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.அருள் ப்ரகாஷ், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் தலைவரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவருமான டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் ஆகியோரால் விளக்கமளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி, ஐ.ஐ.எம். டிவி இணையதளத்திலும் நேரலை செய்யப்படவுள்ளது.
இத்தகவலை, காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ தெரிவித்துள்ளார். |