மலேஷிய நாட்டில் காயல் நல மன்றம் துவக்க முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மலேஷிய காயலர்கள் தொடர்புகொள்ளக் கோரியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மலேஷிய நாட்டில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து மலேஷியா காயல் நல மன்றம் (KAYAL WELFARE ASSOCIATION – MALAYSIA [KWAMALAY] அமைப்பைத் துவக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக, மலேஷியாவில் வசிக்கும் காயலர்கள் அனைவரது விபரங்களையும் சேகரிக்கும் பணிகளை,
குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ (கைபேசி எண்: 0060183505510),
பாளையம் எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (கைபேசி எண்: 0060182766349),
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ (கைபேசி எண்: 00601111172701)
ஆகிய நாங்கள் செய்து வருகிறோம்.
எங்கள் கவனத்திற்குக் கிடைக்கும் அனைத்து காயலர்களின் விபரங்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். எனினும், மலேஷியாவில் வசிக்கும் ஒரு காயலர் கூட விடுபடக்கூடாது என்ற அடிப்படையில், அனைவரின் விபரங்களும் அவசியமாகவும், உடனடியாகவும் தேவைப்படுகிறது.
எனவே, இச்செய்தியைக் காணும் மலேஷியா வாழ் காயலர்கள், இம்மாதம் 20ஆம் தேதிக்குள் உங்கள் பெயர், இருப்பிடம், தொடர்பு எண், மின்னஞ்சல், உள்ளூர் முகவரி உள்ளிட்ட விபரங்களை மேற்கண்ட பொறுப்பாளர்களுள் ஒருவரிடம் தெரிவித்து ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரது விபரங்களும் பெறப்பட்ட பின்னர், உங்கள் யாவருடனும் கலந்தாலோசித்து, வசதிப்படும் ஒரு நாளில் முதல் பொதுக்குழுவை முறைப்படி கூட்டி, அமைப்புக்கு பெயர், நிர்வாகம், செயற்குழு உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது என்பதை அன்புடன் அறியத் தருகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ், நம் நகர் நலனுக்காக நாம் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை ஏற்று அருள் புரிவானாக, ஆமீன்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |