இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களது கூட்டத்தாரையும் எதிரிகளிடமிருந்து இறைவன் காப்பாற்றிய நாள் முஹர்ரம் 10 என்ற வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் முஹர்ரம் மாதம் 09, 10 நாட்களில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பது வழமை.
நடப்பாண்டில், நவம்பர் 14, 15ஆம் தேதிகளில் முஹர்ரம் 09, 10 நாட்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்திலியங்கி வரும் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களுக்காக, இம்மாதம் 15ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமை மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம் மற்றும் கோழி 65 உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்ட இந்நிகழ்வில், அந்நாளில் நோன்பு நோற்றிருந்த - மத்ரஸா மாணவர்கள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 12:45 / 16.11.2013] |