சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்ற 39-வது செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.1,00,500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 39ஆவது செயற்குழுக் கூட்டம், 14.11.2013 வியாழக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின், எமது மன்றத் தலைவர் M.N. மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்கள் இல்லத்தில், துணைத்தலைவர் ஹாஃபிழ் தாவூது இத்ரீஸ் அவர்கள் தலைமை உரையாற்றி துவக்கி வைத்தார்.
ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக பொதுக்குழு உறுப்பினர் M.F. சேகு கலந்துக் கொண்டார்.
நிதிநிலை அறிக்கையை மன்ற பொருளாளர் A.T. சூஃபி இபுறாஹீம் அவர்கள் தாக்கல் செய்தார்.
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
பின்னர், ஷிஃபா மூலமாக நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு ஒன்பது நபர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.88,500-ரும், இரண்டு நபர்களின் கல்விக்காக ரூ.12,000-மும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் புகழும்.
’ஷிஃபா’:
‘ஷிஃபா’வின் அடுத்தக்கட்ட நிலைப் பற்றி துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் அவர்கள் உறுப்பினர்களுக்கு சுருக்கமாக விவரித்தார்.
நன்றி உரை:
நன்றி உரை M.E.L.நுஸ்கி அவர்களால் நிகழ்த்தப்பட்டு, இறுதியாக ஹாஜியார் சாலிஹ் அவர்கள் துஆ ஓதி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத, கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில் மற்றும் ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ்,
ஊடகக் குழு, ரியாத் காயல் நல மன்றம்,
ரியாத் - சஊதி அரபிய்யா.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:45 pm / 15.11.2013] |