துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் குழந்தைகள் தின (நவம்பர் 14) விழா கொண்டாடப்பட்டது. இது குறித்து அப்பள்ளி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
துளிரில் மறுவாழ்வு பயிற்சி பெறும் குழந்தைகள், சிறார்களை மகிழ்விக்க குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தன்று சிறப்பு குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு குழந்தைகள் தங்கள் குறைகளையும், வேதனைகளையும் மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
குழந்தைகள் ஒருவருக்கொருவர் அன்புடனும் இணைபிரியாத நட்புடனும் இருப்போம் என்றும், தங்கள் ஆசிரியர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் அன்புடன் நடப்போம் என்றும் வட்டவடிவில் கைகோர்த்து நின்று கோசமிட்டனர்.
நேரு விரும்பிய ரோஜாவும், குழந்தைகளும் எனும் தலைப்பில் சிறப்பாசிரியை திருமதி ஜெயா குழந்தைகளிடையே பேசினார். துளிர் பெற்றோர் மன்ற உறுப்பினர் சாந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.
சிறப்பாசிரியர்களும், பயிற்றுனர்களும் குழந்தைகள் அனைவருக்கும் கேக் வழங்கி தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். துளிர் பெற்றோர் மன்றத்தின் சார்பில் குழந்தைகள் தினவிழாவிற்கான ஏற்பாடுகளை துளிரின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் செய்திருந்தார்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|