இத்தொடரின் பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
இத்தொடரின் பாகம் 2 காண இங்கு அழுத்தவும்
இந்திய அரசாங்கம் பிப்ரவரி 19, 1991 அன்று Coastal Regulation Zone (CRZ) Notification என்று
வழங்கப்படும் ஆணையை பிறப்பித்தது. 20 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த விதிமுறைகள் ஜனவரி 2011 இல் மாற்றப்பட்டு, புதிதாக Coastal Regulation Zone (CRZ) Notification, 2011 மற்றும் Island Protection Zone (IPZ)
Notification, 2011 ஆகியவை ஜனவரி 7, 2011 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விதிமுறைகள், கடல் (500 மீட்டர் வரை) மற்றும் கடலில் இணையும் ஆறுகள் போன்ற நீராதாரங்களை (கூடுதலாக 100 மீட்டர் வரை) ஒட்டி
உள்ள நிலங்களை கட்டுபடுத்தும்.
எந்த வகையான நிலங்கள் CRZ பகுதிக்குள் வரும் என அரசு அறிவிப்பில் காணப்படும் விளக்கம்
புதிதாக - 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறைகளை தொடர்ந்து, இந்திய கடலோர பகுதிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் ஆய்வு
செய்யப்பட்டு, கரையோர நிலங்கள் எந்த வகையை சார்ந்தது என அறிவிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இரண்டு ஆண்டுகள் தாண்டியுள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதும், கடலோர மாவட்டங்களில் - புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதை
தொடர்ந்து தயார் செய்யப்பட்ட கடற்கரை பகுதி மேலாண்மை திட்ட (COASTAL ZONE MANAGEMENT PLAN) வரை படத்திற்கான பொது மக்கள் கருத்து
கேட்புரை கூட்டம் (PUBLIC HEARING) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 10, 2013 செவ்வாய்க்கிழமை
அன்று மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் (PUBLIC
HEARING) நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர பகுதிகளின் முன்வடிவு CRZ பிரிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் காயல்பட்டினம் கடலோர பகுதிகள், காயல்பட்டினம் எல்லைக்குள் ஓடி, (DCW தொழிற்சாலைக்கு
தென் புறம், ஓடைக்கரைக்கு வடபுறம்) கடலில் சேரும் நீராதாரங்களை சுற்றியுள்ள நிலங்களும் இடம்பெற்றுள்ளது.
தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள விபரங்கள் படி, காயல்பட்டினத்தில் சுமார் 130 நில அளவை (புல) (சர்வே)
எண்கள், CRZ விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதில் சில சர்வே எண்கள் முழுவதும் CRZ 3 பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சில சர்வே எண்களின் பகுதி நிலங்கள் CRZ 1 அல்லது CRZ 3
பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பின்படி - காயல்பட்டினத்தில் CRZ 2 பிரிவில் எந்த நிலமும் இல்லை.
:: CRZ 1 (இந்த நிலங்களில் பகுதி மட்டும்)
99, 247, 257, 258, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 273, 274, 275, 276, 277, 278, 279, 284, 285, 286,
288, 290, 291, 293, 294, 296, 297, 298, 299, 384, 385, 562, 563, 564
:: CRZ 3 (இந்த நிலங்கள் முழுவதும்)
314, 315, 317, 318, 319, 320, 321, 323, 324, 326, 327, 328, 351, 354, 355, 357, 358, 359, 360, 361, 362,
456, 457, 458, 459, 461, 467, 472, 475, 476, 477, 548, 549, 550, 551, 552, 553
:: CRZ 3 (இந்த நிலங்களில் பகுதி மட்டும்)
278, 279, 280, 281, 312, 313, 316, 322, 325, 329, 330, 331, 332, 350, 352, 353, 356, 363, 364, 365, 366,
454, 455, 460, 462, 464, 465, 466, 468, 471, 473, 474, 478, 479, 488, 489, 490, 499, 500, 501, 503, 529, 530, 531, 532, 533,
534, 535, 536, 537, 538, 539, 540, 541, 542, 543, 544, 545, 546, 547, 554
இந்த அறிவிப்பில் ஆட்சேபனை உள்ளவர்கள் மக்கள் கருத்து கேட்புரை கூட்டத்திலோ (PUBLIC HEARING), அதற்கு முன்னரோ தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியத்திடம் தெரிவிக்கலாம்.
[தொடரும் ...]
இத்தொடரின் பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
இத்தொடரின் பாகம் 2 காண இங்கு அழுத்தவும்
நகரின் பிரதான தொழில்களில் ஒன்றான வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) குறித்த சிறப்பு பக்கம்
இணையதளத்தில் உள்ளது. |