தூத்துக்குடி - சென்னை எழும்பூர் செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு குளிர்சாதன வசதியுடைய பெட்டி இணைக்கப்படவுள்ளது.
தூத்துக்குடி - சென்னை, சென்னை - தூத்துக்குடி இடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தொழில் நகரமான தூத்துக்குடியில் இருந்து சென் னைக்கு இந்த ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதை கருத்தில் கொண்டு இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தூத்துக்குடி - சென்னை (எண்.12694), சென்னை - தூத்துக்குடி ( எண்.12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் ஜன.1ம் தேதி முதல் கூடுதலாக ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி. வசதியுள்ள பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டியும் நிரந்தரமாக இணைக்கப்படும்.
நம் மாவட்ட மக்களுக்கு இன்பகரமான ஒரு செய்தி தான் ......இருப்பினும் சாதாரண .. 3 டயர் போகியில் இன்னும்... 2 பெட்டிகள் கூடுதளாகவே இணைத்து இருந்தால் இன்னும் நம் மாவட்ட மக்களுக்கு ரொம்பவும் வசதியாகவே இருந்து இருக்கும் ........ ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா ????
அல்லது நம் மாவட்ட நகரத்தில் இருந்து இன்னும் ஒரு ரயில் இயக்க நம் ரயில்வே நிர்வாகம் முன்வருமா .......நாம் கற்பனையான ஒரு கனவுடன் காத்து உள்ளோம் ...........
துறைமுகம் ..+ தொழில் வளர்ச்சியில் முக்கியமான பங்கு உள்ள ஒரு மாநகரம் தான் நமது மாவட்டம் ....அப்படி இருக்க ஏன்?? நமது மாவட்ட தொகுதி மாண்புமிகு >> M .P. & M.L.A <<< அவர்கள் யாவர்களும் ஒன்றாக இணைந்து செயல் பட்டு..... மாண்புமிகு ரயில்வே மந்திரி அவர்களிடம் ( முறையிடுவதில்லை ) முறையிட்டு மேலும் ஒரு ரயில் சென்னைக்கு கேட்டு வாங்கலாம் அல்லவா ......... ஏன் காலதாமதம் ?? நமக்கு புரிய வில்லை .
பல வருடங்களாகியும் நம் மாவட்டத்துக்கு இந்த ஒரு ரயில் தானே சென்னைக்கு உள்ளது......மக்களின் போக்கு வரத்து அதிகரித்தும் நமது ரயில்வே நிர்வாகம் செவி சாய்ப்பது இல்லை ?? காரணம் என்ன ?? நம் மாவட்ட மக்களிடம் ஒற்றுமை இல்லாமையா ?? அல்லது நாம் அமைதியாக இருப்பதால் நம் ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்வது இல்லையா ??
இதே நமது பக்கத்து மாநிலமான >> கேரளாவில் << தேவை என்கிற பொழுது அனைவர்களுமே ஓன்று சேர்ந்து போராட்டத்தில் ....மொத்தமாகவே களம் இறங்கி வெற்றியும் பெறுவார்கள் ........அந்த பண்பு தான் நம்மிடம் இல்லையே ...........
>>>ஒற்றுமையில் அவர்கள் ( கேரளா ) பெயர் பெற்றவர்கள் .......நாம் ஒற்றுமை '' இல்லாமையில் '' நன்கு பெயர் பெற்றவர்கள் ............என்ன சரி தானே ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross