Coastal Regulation Zone (CRZ) Notification, 2011
விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தயார் செய்யப்பட்ட கடற்கரை பகுதி மேலாண்மை திட்ட (COASTAL ZONE MANAGEMENT PLAN) வரை
படத்திற்கான பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் (PUBLIC HEARING) - தமிழகம் முழுவதும், கடலோர மாவட்டங்களில் - நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 10, 2013 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டம் (PUBLIC HEARING) நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த பொது மக்கள் கருத்து கேட்புரை கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர பகுதிகளின் முன்வடிவு CRZ பிரிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் காயல்பட்டினம் கடலோர பகுதிகள், காயல்பட்டினம் எல்லைக்குள் ஓடி, (DCW தொழிற்சாலைக்கு தென் புறம், ஓடைக்கரைக்கு
வடபுறம்) கடலில் சேரும் நீராதாரங்களை சுற்றியுள்ள நிலங்களும் இடம்பெற்றுள்ளது. தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
வெளியிட்டுள்ள விபரங்கள் படி, காயல்பட்டினத்தில் சுமார் 130 நில அளவை (புல) (சர்வே) எண்கள், CRZ விதிமுறைகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் தங்கள் நிலம் இடம்பெற்றுள்ளதா என அறிய காயல்பட்டணம்.காம் - எளிதான ஏற்பாட்டை செய்துள்ளது.
(1) வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) பக்கம் சென்று காயல்பட்டினம் தென்பாக
கிராமம் கடற்கரை கட்டுப்பாடு பகுதி (CRZ) நிலங்கள் பக்கத்திற்கான இணைப்பை அழுத்தவும்
(2) காயல்பட்டினம் தென்பாக கிராமம் கடற்கரை கட்டுப்பாடு பகுதி (CRZ) நிலங்கள் பக்கத்தில் தங்கள் சர்வே எண்ணை (புல எண்
/ நில அளவை எண்) சமர்ப்பிக்கவும்
(3) அடுத்து வரும் பக்கத்தில் - தங்கள் நிலம் CRZ 1 அல்லது CRZ 2 அல்லது CRZ 3 என்ற மூன்று பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவுக்கு
உட்பட்டிருந்தால், எந்த பிரிவு என்ற விபரம் காண்பிக்கப்படும்
கடற்கரை கட்டுப்பாடு பகுதி (CRZ) பிரிவுப்படி காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து நில அளவை (புல) எண்களையும் ஒரே பக்கத்தில் காண இங்கு அழுத்தவும்
காயல்பட்டினம் தென்பாக கிராமம் கடற்கரை கட்டுப்பாடு பகுதி (CRZ) நிலங்கள் பக்கம் காண இங்கு அழுத்தவும் |