காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் சார்பில், குழுக்குழுவாக தஃவா மற்றும் தர்பிய்யா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டு குழுக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குழுவிற்கான பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 10ஆம் தேதி துவங்கியுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
நமது தஃவா சென்டர் சார்பாக பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது என்ற தஃவா தர்பிய்யா வகுப்பானது இதுவரை இரண்டு Batch- கள் பல்வேறு அழைப்பாளர்களைக் கொண்டு அழைப்புப்பணியின் பண்முகங்கள் பற்றிய வகுப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதன் தொடர்ச்சியாக Batch-3 தஃவா தர்பிய்யாவின் தொடக்க வகுப்பானது கடந்த 10.11.2013 அன்று ஆரம்பம் செய்யப்பட்டது. இவ்வகுப்பில் கலந்து கொள்ள கல்லூரி மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என பலரும் உள்ளூர் / வெளியூரிலிருந்து 58 ஆண்களும், மேலும் தஃவா பணிகளில் பெண்களும் ஈடுபட வேண்டும் என்று இந்த Batch-லிருந்து பெண்களுக்கான தனி இடவசதியுடன் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த்து. இதில் உள்ளூர்/வெளியூரிலிருந்து மொத்தம் 24 பெண்கள் ஆர்வமுடன் தஃவா செய்திட தர்பிய்யா வகுப்பில் கலந்துகொண்டனர்.
வகுப்பு காலை 10மணிக்கு கிராஅத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது. பின் தஃவா சென்டர் மேலாளர் சகோ.ஜக்கரிய்யா அவர்கள் வகுப்பை நடத்தினார்கள். இதில் தூதர் வழியில் தூது, இஸ்லாத்தின் வளர்ச்சி, நாம் ஏன் தஃவா செய்யவேண்டும் போன்ற கருத்துகளை மையமாக வைத்து பாடம் நடத்தினர்.
மதியம் 2.30 மணியளவில் அழைப்பாளர் (தாஈ)களுக்கான நற்பண்புகள் என்ற தலைப்பில் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து காலை நடத்தப்பட்ட வகுப்பிலிருந்து சந்தேகங்கள் கேட்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. பின் அன்றாடம் நாம் ஓத வேண்டிய துஆ மனனம் செய்தல் மற்றும் பேச்சு பயிற்சியுடன் வகுப்பு இனிதே நிறைவு பெற்றது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |