இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களது கூட்டத்தாரையும் எதிரிகளிடமிருந்து இறைவன் காப்பாற்றிய நாள் முஹர்ரம் 10 என்ற வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் முஹர்ரம் மாதம் 09, 10 நாட்களில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பது வழமை.
நடப்பாண்டில், நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் முஹர்ரம் 09, 10 நாட்கள் என, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் அவ்விரு நாட்களிலும் மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்ட இந்நிகழ்வில், அந்நாட்களில் நோன்பு நோற்றிருந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஆஷறா நாளை முன்னிட்டு, ஐ.ஐ.எம். வளாகத்தில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |