தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்து, சிறந்த நூலகங்கள் மற்றும் நூலகர்கள் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், காயல்பட்டினம் அரசு பொதுநூலக நூலகர் அ.முஜீபுக்கு, சிறந்த நூலகருக்கான விருது வழங்கப்பட்டது.
இதற்காக அவரைப் பாராட்டி, இன்று காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் எளிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், காயல்பட்டினம் அரசு நூலகத்தின் புரவலர்களுள் ஒருவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் கலந்துகொண்டு, நூலகர் அ.முஜீபுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எழுத்தாளரும் - சமூக ஆர்வலருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா ஆகியோரும் சிறந்த நூலகர் விருது பெற்ற நூலகருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 16.11.2013 / 4:30 pm] |