Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:01:56 PM
செவ்வாய் | 3 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1951, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:00
மறைவு17:57மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0305:2905:55
உச்சி
12:07
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4519:11
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12343
#KOTW12343
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 16, 2013
காயல்பட்டினம் அரசு நூலகர் முஜீப் - தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த நூலகர் விருதினை சென்னையில் பெற்றார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 7475 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் சார்பில், காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகருக்கு நன்னூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், குழந்தைகள் தின விழா இம்மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில், சென்னையிலுள்ள சாந்தோம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறை இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில், தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் 32 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலகங்கள் மற்றும் நூலகர்களுக்கு சிறப்புப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் நூலகராகப் பணிபுரியும் அ.முஜீப் சிறந்த நூலகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து, ரூபாய் இரண்டாயிரம் பணப்பரிசு, வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது ஆகியவற்றை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.







தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த நூலகமாக கோவில்பட்டி அரசு நூலகமும், சிறந்த நூலகராக காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகர் அ.முஜீபும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும், 36 வயதில் சிறந்த நூலகர் விருதைப் பெறும் முதல் நூலகர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் - இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என கருதப்படுகிறார். சீர்காழியில் 1892ஆம் ஆண்டு பிறந்த இவர், 1972ஆம் ஆண்டு காலமானார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நூலகத் துறைக்கான விருதுகளை வழங்கி வருகிறது. 2012ஆம் ஆண்டு முதல் சிறந்த நூலகருக்கான விருது, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது

தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்

கூடுதல் படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
மற்றும்
அல்மிராஜ் இன்டர்நேஷனல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [16 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31474

அஸ்ஸலாமு அலைக்கும்

இவ் விருதினை பெற்ற நம் அருமை சகோதரர் .முஜிப் அவர்களை நாம் அனைவர்களும் மனதார பாராட்டுவோமாக ......மேலும் நீங்கள் பல நற் விருதுகளை பெற்றிடவும் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம் .........

>>>> தங்களின் சீரிய மக்களுக்கான தொண்டு தொடர எம் வாழ்த்துக்கள் <<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள் நன்னூலகர் முஜீப்!!!
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா-கத்தார்) [16 November 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31476

மாஷா அல்லாஹ்! தபாரக்கல்லாஹ்!

நீங்கள் மென்மேலும் சாதிக்க வேண்டும் என் சகோதரா! உங்களின் சமுதாயப் பற்றும், நூலகப் பணி மீதான உள்ளார்ந்த பற்றும் நான் ஊரிலிருக்கும் காலங்களில் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அல்லாஹ்வின் அருள் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

இக்கணத்தில் என் 12 February 2013 ஆம் நாளைய முந்தைய கமெண்ட் [Comment Reference Number: 25484] ஐ நினைவில் நிறுத்திப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by Seyed Ibrahim (Yanbu,Ksa) [16 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31477

- மச்சான் நீ நல்ல வருவேட.வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Congrats
posted by Mahin (China) [16 November 2013]
IP: 58.*.*.* China | Comment Reference Number: 31482

May peace, mercy and blessing of almighty allah be upon all of us....

Though this news is new, it was well expected.... He was not just librarian according to me, his involvement and commitment towards the growth of the library is not just because its his job, he want to give something to our town and society.... as a kaylite he used to think and discuss a lot for the betterment of library in such a way that its useful for people in kayalpatnam...

He used to talk a lot to me regarding the importance of competitive exams and ignorance of our people about it. Better utilisation of books and library can make success... he tried in all possible ways for the expansion of the library, as there was scarcity of place to keep books.... he approached many peoples and tried possible ways and finally done it with the grace of almighty...

Mujeeb... may allah give you more and more success in your carrier... may allah bless you and all....

Mahin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அரசு நூலகர்
posted by Omer Abdul Qadir (Chennai) [16 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31483

எனது அன்புத்தம்பியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் தம் மீது என்றென்றும் கிட்ட வல்ல நாயனிடம் கையேந்தி கேட்கிறேன்.....

அன்புடன் காக்கா உமர் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [16 November 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 31485

வாழ்த்துக்கள் & பாராடுக்கள் தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. CONGRATULATION
posted by N.M.THANGATHAMBY (Chennai) [16 November 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 31486

டியர் முஜீப் உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக அமைய அல்லாஹு அருள்புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. உன் பணி நீடித்து இந்த நாடோர் நற்பயனடை யட்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [16 November 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31487

சீனம் சென்றாவது கல்விசெல்வத்தைப்பெற்றுக்கொள் என்ற நபிமொழியின் வழிக்கேற்ப,

அக்கல்வி செல்வத்தின் ஊன்றுகோலாக புத்தக துணையை பெறச்செயகின்ற நூலக நிலையத்திற்கும்,அந்த நூலகத்தை நிர்மாணிக்கின்றவரின் நல்ல பண்புள்ள வரவேற்ப்பும், ஒரு சாதாரணவரின் வருகையை கூட விபரங்கள் தெரிந்து தெளிவு பெற்று செல்லும் திருப்த்தியை யடைந்தவராக்குகிறார்!

அப் புண்ணிய பணிக்கு சொந்தமானவரும்,என் குடும்ப உறவுக்கு சொந்தமுமான அன்புத்தம்பி முஜீபை நான் மனமார பாராட்டுகிறேன்!

உன்னுடைய புண்ணிய சேவையில் பொதிந்துள்ள உண்மை தத்துவத்தை வார்த்தைகளாலும்,வரிகளாலும் சொல்லவோ எழுதவோ முடியாது!

உன் பணி நீடித்து இந்த நாடோர் நற்பயனடைய நெடியோனாம் வல்லோனை வேண்டுகிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வாழ்த்தும் உள்ளம்!
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாழ்த்துக்கள்!!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [16 November 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31488

வாழ்த்துக்கள் சகோ. முஜீப் !! உண்மையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பாராட்டுக்கள்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [16 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31489

அருமை சகோதரர் அ.முஜீபு அவர்கள் தமது கடின உழைப்பு மற்றும் கடமை உணர்வால் இந்த நூலகத்தை கண்ணுங்கருத்துமாக பராமரித்து வருகின்றார். மாற்றுத்திறனாளியான அவர் தமது உடல் உறுப்பில் ஏற்பட்ட குறையைக்கூட பொருட்படுத்தாமல் சுறுசுறுப்போடு செயல்பட்ட்டு வரும் விதத்தைக் கண்டு நானே பல முறை வியந்துள்ளேன்.

நூலகப்பணி மட்டுமின்றி சமுகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பன முறையில் சேவையாற்றி வர்பவர். தமிழக அரசின் இந்த மகத்துவமிக்க விருது சரியான நேரத்தில் சரியான ஆளுக்கு கிடைத்துள்ளது.

நமதூர் அரசு பொது நூலகத்தில் 2010 வரையில் வெறும் எட்டு போர் மட்டுமே புரவலராக இருந்து வந்த நிலையில், சமூக நலத்தில் ஆர்வமும்,துடிப்பும் மிக்க இளைஞர் சகோதரர்,அ.முஜீபு அவர்கள் 30-06-2010 முதல் நூலகராகப் பணி நியமனம் செய்யபட்ட பிறகு, 2010-2011 வரை புரவலர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது குறிப்பைடத்தக்கது.

வாழ்த்துக்கள்...! நண்பரே...! இன்னும் மென்மேலும் பல விருதுகள் பெற்று தங்கள் சமூகப்பணியும், புகழும் சிறக்க நான் என் மனம் உவந்து வாழ்த்துகின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்
posted by abu MBS (Chennai Amanjikarai ) [16 November 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31491

வாழ்த்துக்கள் சகோ. முஜீப் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by K S MUHAMED SHUAIB (Kayalpatinam) [16 November 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 31492

சகோதரர் முஜீப் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் ..!இன்னும் மேலும் மேலும் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by solukku.ME.Syed Md Sahib (QATAR) [16 November 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 31494

அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த நல்ல நூலகரை நமது ஊர் பள்ளி மாணவர்கள் பயன் படுத்தி கூடுதல் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இன்னும் பழ வெற்றிகள் பெற என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. உனது தன்னம்பிக்கைக்கு கிடைத்த விருது...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [16 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31496

எனது அன்பு நண்பனின் தம்பி அருமை சகோதரர் முஜீப் அவர்கள் தமிழக அரசின் நூலகத் துறைக்கான விருதினை பெற்ற செய்தி அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்தேன்..

இந்த சகோதரரின் பொறுமைக்கும் - தன்னம்பிக்கைக்கும் மற்றும் தொடர் முயற்சிக்கும் கிடைத்த விருது. நீங்கள் பெற்ற விருதினால் உன்னை ஈன்ற பெற்றோர்களும் உடன் பிறந்த உறவுகளும் நமது நகரமும் பெருமை கொள்கிறது..

மேலும் மேலும் உன் வாழ்வில் உயர்ந்து மேலும் நீங்கள் பல நல் விருதுகளை பெற வாழ்த்தி பாராட்டுகின்றேன்..

சரீர நலத்துடன் நீங்கள் வாழ வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by A.Lukman (Thiruvallore) [16 November 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 31499

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் முஜிப் அர்பணிப்பு வுனர்வுடன் தன் கடமையை செய்பாவர். மார்க்கப்பற்று மிக்கவர். அவர் பணி மேலும் சிறக்க அல்லாஹ் அருள் புரிவனாக.

லுக்மான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mmohmedyounus (kayalpatnam) [16 November 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 31500

வாழ்த்துக்கள் ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Best of luck
posted by Moosa Sahib (Kayalpatnam) [16 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31501

தங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. .வாழ்த்துக்கள்
posted by nawaz sahib (Kayalpatnam ) [16 November 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 31502

நண்பர் முஜீப் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [16 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31503

வாழ்த்துக்கள்.

தங்கள் பணி மேலும் சிறக்க வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. வாழ்த்துக்கள் நண்பா
posted by Mohamed Yusuf (Chennai) [16 November 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 31505

Alhamdulillah. My hearty congrats for your success.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by s.e.m. abdul cader (bahrain) [17 November 2013]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 31506

MASHALLAH, NICE TO READ AS WELL AS HEAR THIS GOOD NEWS, I WISH YOU ALL THE BEST. WASSALLAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [17 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31508

மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்
வாழ்த்துக்கள் முஜீப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. வாழ்த்துக்கள்!
posted by Mauroof (Dubai) [17 November 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31511

அருமை நண்பர் அ. முஜீப் அவர்கள் இவ்விருது பெறுவதைக் கண்டு மிகுந்த உவகை அடைகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ், உங்களது இருலோக வாழ்விலும் உயர்ந்த வெற்றிகளைத் தருவானாக என பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [17 November 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31513

அன்பு சகோதரர் முஜீப் நின் அயராத உழைப்புக்கு கிடைத்த உரிய அங்கீகாரம். தொடரட்டும் நின் சமூக பணி. வாழ்க வளமுடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே
posted by T.S.A. Aboothahir (chennai) [17 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31515

நமது ஊர் மக்கள் அரசு பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்து வந்தது. அந்த குறையை களையும் வகையில் அரசு பணியில் இணைந்ததே பெரும் சாதனை. அதிலும் உள்ளூரிலேயே என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அதையெல்லாம் கடந்து சிறந்த நூலகர் என விருது பெற்றது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மட்டற்ற மகிழ்ச்சி.

அவரின் தந்தை அன்பு பெரியவர் காஜா அப்பா அவர்கள் சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் பாராது அன்பு பாராட்டும் அபூர்வ மனிதர், தனக்கும் வயது ஆகிவிட்டது என்று தன்னை பலவீனப்படுத்திக் கொள்ளாது தன்னால் முடியாத காரியங்களையும் முயன்று செய்யும் சிறந்த குணத்திற்கு சொந்தக்காரார். உதாரணமாக, உறவினர்களை சந்திப்பது, நோயாளிகளை சுகம் விசாரிக்கச் செல்வது, மய்யித் தொழுகையில் கலந்துகொள்வது, பயான் மஜ்லிஸ்கள் (அது எவ்வளவு தூரமானாலும் நேரமானாலும்) செல்வது போன்றவை. அவர்களிடம் நான் கண்டு வியந்தது,

முடியாது இயலாது என்று எதிர்மறையில் (negative) சிந்திக்காது எதையும் நேர்மறையில் (positive) சிந்திப்பவர், அதற்கு சிறந்த உதாரணம்தான் தன் மகனின் உடல் இயல்பைக் கூட குறையாக நினைத்து வீட்டிலேயே உட்கார வைத்து விடாமல் அவரை பட்டப் படிப்பு படிக்க வைத்து, பணியில் அமர்த்தி இன்று பதக்கமும் பெறச் செய்திருப்பது, சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே என்பதற்கொப்ப தன் கடமையை சரியாக செய்தவர்கள் கண்ணியமிகு காஜா அப்பா அவர்கள், அல்லாஹ் அவர்களின் வாழ் நாளை சரீர சுகத்துடனும் சகல சவ்பாக்கியங்களுடனும் நீளமாக்கி வைப்பானாக.

தன் மகன் உழைத்து தன்னைக் காப்பாற்றுவான் என்று மகனுக்கு செலவு செய்பவர்கள் ஒரு வகையினர், இவனெல்லாம் எங்கே உருப்படப் போகிறான் என்று மக்களின் ஆர்வத்தை, திறமையை மட்டம் தட்டும் தகப்பர்கள் இன்னொரு வகையினர், கல்யாண அழைப்பிதழில் பெயருக்குப் பின்னால் பட்டம் போடுவதற்காகவே படிக்க வைப்பவர்கள் சிலர், அரபு நாடுகளின் கனவுகளோடு ஏதோ ஒப்புக்கு படிப்பவர்கள், படிக்க வைப்பவர்கள் சிலர், எதற்கு இதுவெல்லாம் என்று தம் மக்களை மேல் படிப்பு படிக்க வைக்காதவர்கள் பிறிதொரு வகையினர், இவர்களில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்டு முன் உதாரணமாக திகழ்ந்து ஊருக்கு பெருமை தேடித் தந்த இவர்கள் நிச்சயம் நம் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்,

ஏதோ இது ஒப்புக்காக எழுதப்பட்ட விமர்சனம் அல்ல. மாறாக ஒவ்வொரு வரிகளுக்குப் பின்னாலும் என் உணர்வுகள் மறைந்திருக்கிறது.

நண்பர் முஜீப் இன்னும் சிறப்பாக சேவை ஆற்ற வேண்டும், நமதூரில் வசிக்கும் சமூகத்தை வாசிக்கும் சமூகமாக வார்த்தெடுக்க வேண்டும், அதற்காக முயற்சிக்க வேண்டும். என்பது என் அவாவும் துஆவும்,

நம்மவர்கள் அவரின் ஆக்கபூர்வமான பணிகளுக்கு ஊக்கம் வழங்க வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by M.I.KHALEELUR RAHMAN (JAIPUR) [17 November 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31516

எனது அன்புள்ள தம்பி முஜீப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும். மாஷா அல்லாஹ் உங்களது அரும்பணிக்கு பாராட்டுக்கள். மேலும் தங்களின் பணி நனிசிறக்க வல்ல அல்லாஹ்விடம் கை ஏந்துகின்றேன். நமது ஊருக்கு பெருமை சேர்த்து தந்த உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். எல்லா மக்களும் நமது நூலகத்தை பஎன்படுத்த முஎர்ச்சி செய்வீர்கள். நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [18 November 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31522

எனது அருமை நண்பனுக்கு வாழ்த்துக்கள் & பாராடுக்கள்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. மனமார்ந்த வாழ்த்துக்கள்
posted by Shaik Dawood (Hong Kong) [18 November 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 31523

சகோதரர் ... நண்பர் முஜீபு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தங்கள் சாதனைகள் தொடரட்டும்....

வல்ல அல்லாஹ் எல்லா உதவிகளையும் தங்களுக்கு செய்வானாக ... ஆமீன்.

தாவூது (அபு ஹமீது ஷாஃபீ)
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by ALS IBNU ABBAS (kayalpatnam) [18 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31534

அஸ்ஸலாமு அழைக்கும் ,விடா முயற்சிக்கு இறைவன் நிச்சயமாக வெற்றியை தருவது போல் நமதூர் அரசு நூலகர் அ. முஜீப் மன வலிமைக்கு விருது,பதக்கம்,சான்றிதழ்,Rs .2000/- ரொக்கம் கிடைத்து இருப்பது காயல் நகருக்கே பெருமையாக உள்ளது.காயல் நகர தனியார் நூலகங்கள் சார்பில் வாழ்த்து கூறி பாராட்ட வேண்டியது எங்களின் கடமையாகும்,இன்னும் பல நூலக விருதுகளை அவர் வாங்க இறைவன் உதவி செய்வான்.புன்னகை மன்னருக்கு புகழ் சேர்ப்போம் கூடி வாருங்கள்.வாழ்த்துகிறோம்,பாராட்டுகிறோம்.

ALS இப்னு அப்பாஸ்,
நூலகர்&தலைவர்,
சீதக்காதி நினைவு நூலகம்,
தாயும்பள்ளி வளாகம்,
KTM தெரு, காயபட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...Masha allah
posted by seyed ibrahim K.M (chennai) [18 November 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 31536

Masha allah melum ungal pani sirakka yen walthukkal.

Ismail & Ammaar
L.F.Road


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved