காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் LIVEWELL (பூவந்தி - மதுரை) சார்பில், ஃபிஸியோதெரபி இலவச முகாம், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் இம்மாதம் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில்,
* பக்கவாதத்தினால் கை, கால், பேச்சு முடங்கியோர்,
** விபத்தினால் முதுகுதண்டு பாதிப்பு, எலும்பு முறிவு பாதிப்பு, மூளை பாதிப்பு உள்ளோர்,
*** முதுமையினால் தசை, மூட்டு பாதிப்புக்குள்ளானோர்,
**** பல நாட்களாக மூட்டு, முதுகு வலியால் சிரமப்படுவோர்
உள்ளிட்டோருக்கு பிசியோதெரபி (Physiotherapy), ஆக்குபேசனல் தெரபி (Occupational Therapy), பேச்சுப் பயிற்சி (Speech Therapy) ஆகிய பயிற்சிகளும் - ஆலோசனைகளும், அத்துறை சார்ந்த நிபுணர் கனியரசு தலைமையிலான குழுவினரால் வழங்கப்பட்டது.
இம்முகாமில், 140 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஜெ.ஹைதர் அலீ தலைமையில், மற்றொரு துணைத்தலைவர் பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், பொருளாளர் பிரபு செய்யித் முஹ்யித்தீன், துணைப் பொருளாளர் முஹம்மத் முஹ்யித்தீன் என்ற தீன்தீன், அங்கத்தினரான நோனா மஹ்மூத் மானாத்தம்பி, குளம் ஜமால், மரைக்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |