திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (நவம்பர் 21; வியாழக்கிழமை) விரைவு பட்டா மாறுதல் திட்டம் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள விபரம் வருமாறு:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், விரைவுபட்டா மாறுதல் திட்டம் 1.10.2011 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்படி பட்டாமாறுதல் கோரும் மனுக்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி அதற்கான உத்தரவுகளை 15 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 2011 முதல் செப்டம்பர் 2013 வரை பட்டா மாறுதல் கோரி 1,55,132 மனுக்கள்
வரப்பெற்று அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 1,53,979 மனுக்கள் த Pர்வு செய்யப்பட்டுள்ளது. மீதம் 1153 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது.
இதற்கிடையில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு விரைவு பட்டா முகாம் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் தாலுகா தலைமையிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மனுக்கள் பெற உத்திரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்தந்த வட்டங்களில் உள்ள அனைத்து கிராமத்தினரும், இதுவரை பட்டாமாறுதல் மனு கொடுக்கத்தவறியவர்கள், புதிதாக மனுக்கொடுப்பவர்கள், ஏற்கனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதில் கேட்கப்பட்ட விபரங்களையும் இணைத்து அந்தந்த முகாம்களில் கொடுக்கலாம். மேற்படி முகாம்களின்போது அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பிர்கா சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் மற்றும் சிறப்பு பணியாளர்களும் கலந்துகொள்வார்கள்.
உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் மனுக்களுக்கு பரிசீலனை செய்து தகுதியிருப்பின் 15 நாட்கள் கழித்து அதே வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் / மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் பட்டா வழங்கப்படும். உட்பிரிவு இனங்களுக்கு 30 நாட்கள் கழித்து
தகுதியுள்ள மனுக்களுக்கு பட்டா தயார்செய்து அதே வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்படும்.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில்
10.10.2013 வியாழக்கிழமை எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,
17.10.2013 வியாழக்கிழமை சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,
24.10.2013 வியாழக்கிழமை விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,
31.10.2013 வியாழக்கிழமை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்,
7.11.2013 வியாழக்கிழமை ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்
சிறப்பு முகாம்கள் நடைபெற்றன..
இந்த வரிசையில் நாளை (நவம்பர் 21; வியாழக்கிழமை) திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து -
28.11.2013 வியாழக்கிழமை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும்
5.12.2013 வியாழக்கிழமை தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெறும்.
|