ஜோர்டான் நாட்டு தலைநகர் அம்மான் நகரில் இருந்து செயல்புரியும் அமைப்பு ROYAL
AAL AL-BAYT INSTITUTE FOR ISLAMIC THOUGHT. 1980 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த அமைப்பு, ஜோர்டான் மன்னர் குடும்பத்தின் ஆதரவுடன்
செயல்புரிந்து வருகிறது. பல்வேறு காரியங்களில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு, 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் - அவ்வாண்டின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களை தரவரிசைபடுத்தி பட்டியல் வெளியிடுகிறது. 2013/14
ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியல் அடங்கிய புத்தகத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும் (229 பக்கங்கள்).
இந்த பட்டியல்படி, 2013/14 ஆம் ஆண்டில் ---
-- முதல் இடத்தை பேராசிரியர் டாக்டர் சேக் அஹ்மத் முஹம்மத் அல்-தய்யிப் (அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர்;
அல்-அஸ்ஹர் பள்ளி இமாம்; எகிப்து) பெறுகிறார்.
-- இரண்டாம் இடம் சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் அல்-சௌத் பெறுகிறார்.
-- மூன்றாம் இடம் - ஆயத்தொல்லாஹ் ஹஜ் சயித் அலி கமினீ (ஈரான் நாட்டின் தலைவர்) பெறுகிறார்.
தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 50 பேர் விபரம் ...
தரவரிசையில் இதர 450 பேர் கீழே குறிப்படப்பட்டுள்ள துறைகளை சார்ந்தவர்கள் ...
பட்டியில் இடம்பெற்றுள்ள அனைவரின் விபரம் - நாடு வாரியாக ... (பெயருக்கு அருகில் குறிப்பிடப்பட்டுள்ள எண் புத்தகத்தின் பக்கம் எண்)
பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் ... (பெயருக்கு அருகில் குறிப்பிடப்பட்டுள்ள எண் புத்தகத்தின் பக்கம் எண்)
இந்த பட்டியலில் 20க்கும் மேற்பட்ட - பல்வேறு துறைகளை சார்ந்த - இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் முன்னாள் இந்திய ஜனாதிபதி
ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக், விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி, பொஹ்ரா இஸ்லாமியர்களின் தலைவர்
செயத்துனா முஹம்மத் புர்ஹானுதீன் ஆகியோரும் அடங்குவர்.
கீழக்கரையை சார்ந்த தொழிலதிபர் மற்றும் கல்வியாளர் ஹாஜி பி.எஸ். அப்துர் ரஹ்மான், கீழக்கரையை சார்ந்த மார்க்க அறிஞர் டாக்டர் தைக்கா
சுயேப் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவலில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில் மற்றும்
கே.கே.எஸ். முஹம்மத் சாலிஹ் (பெங்களூரு) |