காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், இம்மாதம் 21, 22 தேதிகளில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை ஆர்.மீனா சேகர் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
பல்வேறு தலைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நூற்களை, பள்ளி மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஆசிரியையர் ஊக்கமளித்ததன் காரணமாக, பொது அறிவு, அகராதி, வினாடி-வினா, ஆங்கில பேச்சுப் பயிற்சி, தேசிய தலைவர்கள் வரலாறு, உலகச் செய்திகள், மருத்துவம் உட்பட பல்வேறு தலைப்புகளிலான சுமார் 2000 நூல்களை மாணவ-மாணவியர் வாங்கிச் சென்றனர். |