தமிழக அரசின் மாநில நிதித்திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் பெண்களுக்கான நவீன கழிப்பிடம் (யூனிவர்சல் டிசைன்) கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரி - காயல்பட்டினம் நகராட்சி, தினத்தந்தி நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
15 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த பணியினை மேற்கொள்ள 4ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேலான ஒப்பந்ததாரர்கள் தகுதியானவர்கள் எனவும், இப்பணியினை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் இவ்விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 17, 2013 - மாலை 4 மணி வரை, உரிய கட்டணம் செலுத்தி - ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இப்பணிக்கான முன் வைப்பு தொகை ரூபாய் 15,000 (மதிப்பீட்டில் 1 சதவீதம்) என்றும் மேலும் அவ்விளம்பரம் தெரிவிக்கிறது.
|