காயல்பட்டினம் சார்ந்த முஹம்மது இப்ராகிம், செம்பருத்தி மலரை சாகுபடி செய்துவருகிறார். காயமொழியில் உள்ள நிலத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் குறித்த செய்தியினை பசுமை விகடன் பத்திரிக்கை தனது 10-12-2013 இதழில் வெளியிட்டுள்ளது.
6. Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[25 November 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31664
முன்பெல்லாம் நமதூர் மக்கள் பெரும்பாலானோருக்கு வயல்கள் இருந்தது . ஆனால் ஒருநாள்கூட வயல்வெளியில் இறங்கி வேலை செய்திருக்க மாட்டார்கள் . " உழவன் " என்ற ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு , அவர் சொல்லும் கணக்கையும் , அவர் தரும் நெல் மூட்டைகளையும் வாங்குவார்கள் . அங்கு என்ன நடக்கிறது என்பதே நம்மவர்களுக்கு தெரியாது . நாளடைவில் உழுகின்ற நிலம் உழவனுக்கே சொந்தம் என்ற சட்டத்தால் எல்லா வயல்வெளிகளையும் உழவனுக்கே தாரைவார்த்து விட்டோம் .
இது ஒருபுறம் இருக்க , நம்மவர்கள் பெரும்பாலானோர் வெளியூரிலும் , வெளிநாட்டிலும் வியாபாரம் செய்து வந்தார்கள் . இதுபோன்ற வயல்வெளியைக்காட்டிலும் வியாபாரமே மேலாக தெரிந்தது . இதனால் வயல்வெளியை கவனிக்க ஆளில்லாமல் , நிலங்களை உழவனுக்கு தாரைவார்க்க வேண்டியதாயிற்று .
இன்றும்கூட நம்மவர்களுக்கு பக்கத்து ஊர்களில் தென்னந்தோப்புகள் உள்ளது . அங்கும் அதே கதைதான் . தோட்டக்காரனிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறோம் . அவர் தரும் தேங்காய்தான் கணக்கு . சில சமயங்களில் அதுவும் இல்லை என்பார் .
எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் . தம்பி முஹம்மது இப்ராஹீம் பேட்டியை பார்கையில் இந்த விவசாயத்தில் அவரே நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார் . அதனால்தான் வெற்றி இவருக்கு சாத்தியமாயிற்று .
9. மேலும் வளர துஆ செய்கிறேன். posted bySaalai Abdul Razzaq Lukman (Kayalpatnam)[25 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31668
பாராட்டுக்கள். அல்லாஹ் உன்னுடைய தொழில் மேலும் வளர, பரகத் கிடைக்க துஆ செய்கிறேன். நீ பொது காரியங்களில் ஈடுபட்டு, வெற்றி பெற்றது போல் இதிலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தினசரி உன்னை பார்க்கத்தான் செய்தேன். ஆனால் சொல்லவே இல்லை. உன் மாமனாரைப் போல் நீயும் விவசாயத்தில் ஈடுபட்டு இருக்கிறாய்.
இவரின் வெற்றியில் படிப்பினை என்னவென்றால், எந்த தொழிலிலும் முழுமையாக அர்பணிப்பு ஈடுபட்டால், அல்லாஹ் உதவியுடன் வெற்றி கிடைக்கும். நண்பன் S.M.அலி குறிப்பட்டது போல், விவசாயத்தை நமதூர் மக்கள் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டதனால் தான், வயல்காரனும், தோட்டக்காரனும் தருவதை நாம் வாங்கிக் கொள்கிறோம். இதில் நானும் விதிவிலக்கல்ல.
தம்பி இப்ராஹீமிடம் ஆலோசனை கேட்டு விவசாயத்தில் ஈடுபடலாம். வாழ்த்துக்கள்.
13. Re:... posted byகுளம் முஹம்மது தம்பி (சென்னை)[25 November 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 31673
சகோதரர் இப்ராஹீம் அவர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஒரு சிறிய அங்கீகாரம் தான் இது, மேலும் நிறைய பெயரும் பொருளும் ஈட்ட வல்ல இறைவன் இவருக்கு துணை புரிவானாக.
14. Re:...செம்பருத்தி பூவே.... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31674
இவர் யார் என்று தெரிகின்றதா?
காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு கழகத்தில் (KEPA)வில் ஒரு முக்கிய உறுப்பினர்.
ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மொகுதூம் ஜூம்மா பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்.
இவரது முன்னோர்கள், இவரது பெற்றோர்கள் மாணிக்க வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிரவர்கள்.
48 துட்டு என்பது அவர்கள் குடும்ப பெயர். ஒரு ரூபாய்க்கு 48 துட்டுக்கள் என்று இப்ராஹீம் அவர்கள் தந்தையின் முப்பாட்டனார் கேலியாக சொன்னது அவர்கள் குடும்ப பெயராக அமைந்து விட்டது.
தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
வித்தியாசமாக சிந்தித்து சாதித்துக் காட்டியிருக்கும் எனது இனிய மருமகனுக்கு வாழ்த்துக்கள்..
18. பிறருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[26 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31681
மாஷா அல்லாஹ்... காயல் மண்ணில் ஒரு புதிய விவசாய சகோதரரை கேள்வி படும் போது மனது மகிழ்ச்சி அடைகிறது... இந்த சகோதரரின் உழைப்பு நகரில் சும்மா வீணாக நேரத்தை கழித்து வரும் (இன்னும் பிறருக்கு) ஒரு பாடமாக அமைய வேண்டும்...
இப்ராகிம் அவர்களே...! உங்களின் இந்த புரட்சிகரமான சாகுபடிக்கு எனது வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
வல்ல இறைவன் மேலும் உங்களின் விளைச்சலை அதிகபடுத்தி அதிகமான பரக்கத்தை கொடுப்பானாக ஆமின்...
19. அங்கீகாரத்தின் தொடக்கம்! posted byMauroof (Dubai)[26 November 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31683
மலர்ந்திருப்பது செம்பருத்தி மலர் மட்டுமல்ல, அவைகள் மலர்வதற்கு வித்திட்ட உம் முகமும் கூடத்தான்.
சப்தமில்லாது சரித்திரங்கள் படைக்கும் இளைஞர்கள் பட்டியலில் இன்று உமது பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
பசுமையை நீர் விரும்ப, பசுமையும் உம்மை விரும்ப, இவை இரண்டையும் விரும்பும் "பசுமை விகடன்" ஓர் தொடக்க அங்கீகாரத்தை உமக்கு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இன்னும் பல அங்கீகாரங்கள் உம் கைகளில் தவழ்வதற்கு காத்துக் கொண்டிருக்கும். வாழ்த்துக்கள்.
உமது முயற்சியையும் அதன் வெற்றியையும் எண்ணுகையில் கவிமணியனின் கீழ்கண்ட கவிதை வரிகள்தான் என் ஞியாபகத்தில் வந்தது.
சகோதரர் இப்ராஹீம் அவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு “வேத புர்கானில் கூறப்பட்ட நபிமார்களின் பெயர்கள்” பற்றிய இனிய பாடல்வரிகள் தான் உடனே நினைவில் வரும்.
“மன் ஜத்த வஜத” [முயற்சித்தவன் மட்டுமே பெற்றுக் கொள்வான்] என்னும் அரேபியப் பழமொழியையும் நினைவுறுத்தும் வண்ணம், தானும் களமிறங்கி பயிரிட்டதால் இன்று அவர் செம்பருத்திச் செம்மலாகவும் அங்கீகரிக்கப் பட்டிருப்பது மகிழ்வளிக்கிறது.
வாழ்த்துக்கள்! அல்லாஹ் தங்கள் இந்த தொழிலில் அபிவிருத்தியையும் தருவானாக!
22. பசுமை விகடன் முந்திவிட்டது! posted byS.K.Salih (Kayalpatnam)[26 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31687
அன்பு நண்பன் 48 இப்றாஹீமின் இந்தச் சாதனைக்குப் பின்னணியில் ஏராளமான அவதிகள் உள்ளதை நான் நன்கறிவேன்.
பொதுவாக, வயசுப் பிள்ளைகள் ஊரிலிருப்பதே கவுரவக் குறைவாகக் கருதப்படும் இக்காலகட்டத்தில், நல்ல தொழில் துறைகளில் கோலோய்ச்சி வரும் இவரது குடும்பத்தாருடன் இணைந்து இவர் வேறு ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துச் சென்றிருக்கலாம். செல்லவும் செய்தார். ஆனால் அவரால் அதில் நிலைக்க இயலவில்லை.
சிறு வயது முதலே அவரை ஆட்கொண்ட பசுமைத் தாகம்தான் இன்று இந்நிலைக்கு அவரை மிளிரச் செய்துள்ளது. இதற்காக அவர் கொடுத்த விலை ஒன்றிரண்டல்ல! நம் ஊரின் பொதுவான மனப்பதிவுடன் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு இதுகுறித்து எடுத்துக்கூறி, அவர்களை சரிகாணச் செய்து, மாதங்கள் பல கடந்த பின்பே மகசூலை எதிர்பார்க்க முடியும் என்றிருந்த நிலையிலும் - செம்பருத்திச் செடியை நவீன பூச்சிக்கொல்லி விஷம் (மருந்து?!) எதையும் தொட்டுக் கூடப் பாராமல் முளைப்பித்து, மகசூலில்லா மாதங்களில் குனிந்த தலை நிமிராமல் குடும்பத்தாருடன் அவர் அளவளாவியது வரை எனக்குத் தெரியும்.
அப்பேர்பட்ட இவரது முயற்சி இன்று திருவினையாகியுள்ளது. கருணையுள்ள அல்லாஹ் இவர் வாழ்நாள் முழுக்க மனம் தளராத அளவுக்கு அபரிமிதமான மகசூலையும், அதன் காரணமாக மகிழ்ச்சியையும் அவர் குடும்பத்தில் திளைக்கச் செய்வானாக. இன்று இவர் பலருக்கு முன்னுதாரணமாகிவிட்டார். இன்ஷாஅல்லாஹ் நாளை இவர் காயலர்களின் பசுமைக் கதாநாயகனாகவும் மாற முடியும். அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.
ஓரிரு முறை இவரது தோட்டத்திற்கு இணைந்து சென்றேன். அங்கு செம்பருத்தியையும் தாண்டி காணக்கிடைத்த பனங்கிழங்கு, முருங்கைக் கீரை, முருங்கைக்காய், எலுமிச்சம்பழம், நார்த்தங்காய் ஆகியவற்றைக் கபளீகரம் செய்து, குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களோடு திரும்பும் வழமையைக் கொண்டிருந்தேன். ரமழானுக்குப் பிறகு அது தொடரவில்லை. இன்ஷாஅல்லாஹ் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடரும் எனது களப்பணி.
இவரது செம்பருத்தித் தோட்டம் குறித்து விபரங்களைச் சேகரித்து விரிவான செய்தியொன்றை வெளியிட மனதளவில் எண்ணியிருந்தேன். என் எண்ணம் கரையேறுவதற்குள் ‘பசுமை விகடன்’ முந்திக்கொண்டது. இதை விட அது சிறப்புதானே...?
23. பிழை திருத்தம் posted byyahya mohiadeen (dubai)[26 November 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31690
"ஓரிரு முறை இவரது தோட்டத்திற்கு இணைந்து சென்றேன். அங்கு செம்பருத்தியையும் தாண்டி காணக்கிடைத்த பனங்கிழங்கு, முருங்கைக் கீரை, முருங்கைக்காய், எலுமிச்சம்பழம், நார்த்தங்காய் ஆகியவற்றைக் கபளீகரம் செய்து, குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களோடு திரும்பும் வழமையைக் கொண்டிருந்தேன். ரமழானுக்குப் பிறகு அது தொடரவில்லை. இன்ஷாஅல்லாஹ் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடரும் எனது களப்பணி" (copy அண்ட் paste)
தம்பி சாலிஹ்,
ரமழான் காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டதால் அதன் பிறகு இக்காரியங்கள் நடைபெறவில்லை என நினைக்கிறேன்.
மேலும், களப்பணி என்று குறிப்பிட்டிருக்கிறாய் - களவுப்பணி என்பதே சாலப் பொருந்தும்.
24. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் )[26 November 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 31692
அன்பு தங்கையின் கணவர் அவர்களின் சாதனை செய்தியை கண்டு தலைக்குனிவுடன் பாராட்டுகின்றேன்.
காரணம் சகோ. S.K.சலிஹ் சொல்லுவது போன்று, நானும் மச்சானை தூற்றியது உண்டு. சம்பாதிக்கும் வயதான இந்த சிறிய வயதில் இப்படி பொடுபோக்காக இருக்கின்றாயே, ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க மாட்டாயா? இப்படி வீடு காடு என்று சுற்றுகின்றாயே என்று பலமுறை கடுமை காட்டியுள்ளேன். ஒரு தடவை கூட டென்ஷன் ஆகாமல், புன்னகை மாறாமல், கொஞ்சம் நாள் தான் மச்சான்...அறுவடை ஆரம்பித்து விட்டால் எல்லாம் நலமாக அமையும் என்று கூறி விடுவான்.
அல்ஹம்து லில்லாஹ். அனைத்தும் நன்றாக அமைந்து வருகின்றது.
மார்க்கத்தில் பற்றுதல், அனைவர்களுக்கும் உதவும் மனப்பான்மை, குழந்தை பிறந்த வீட்டிற்கு உதவுவது முதல், மரணித்த மனிதனை குளிப்பாட்டி அடக்குவது வரை நீ செய்யும் உதவிகள், பள்ளிவாசலில் உன்னுடைய பங்களிப்பு போன்ற உன்னுடைய நற்குணங்களை கண்டு பூரிப்படைகின்றேன்.
வல்ல ரஹ்மான் உன்னுடைய வாழ்வில் எல்லா வளங்களையும் வழங்குவானாக..! தொடரட்டும் உன்னுடைய சேவைகள்.
25. Re:... posted byK S Muhammed shuaib (Kayalpatnam.)[27 November 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 31711
சகோதரர் இப்ராஹிம் அவர்களின் செம்பருத்தி முயற்சி பாராட்டத்தக்கது. அவரது செம்பருத்தி தோட்டத்திற்கு ஒரு முறை சென்று பார்க்கவும் வாய்ப்பு கிட்டியது. செம்பருத்தியோடு ஏதேனும் ஊடு பயிராக விதைத்தால் சகோதரருக்கு இன்னும் பலன் கிட்டும் என நம்புகிறேன்.
செம்பருத்திக்காட்டில் வெயிலோடு நின்று போராடி சகோதரர் இப்படிக் கறுத்து விட்டாரே .என்று என்னும் போதுகொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கிறது.
எனினும் செம்பருத்தி தைலத்தின் குணமே முடியைக் கறுக்கவைப்பதுதான் என்பதை மனதில் கொண்டு சகோதரை வாழ்த்துகிறேன். .
நமது ஊரிலுமா ?? இப்படி ஒரு சிறப்பு பெற்றவர் ....நம்முடைய அருமை சகோதரர் ஜனாப் .இபுராஹிம் அவர்களின் சாதனை .....மாஷா அல்லாஹ் ....நாம் எப்படி தான் நம் சகோதரர் அவர்களை பாராட்டுவது என்றே நமக்கு ஒன்றுமே புரிய வில்லை .
அருமை சகோதரர் ஜனாப் .இபுராஹிம் அவர்களே தங்களை வாழ்த்தி ...தங்களின் இந்த முன்னேற்றம் மேலும் சிறப்பு அடையவும்....தாங்கள் இன்னும் பலன் அடையவும் துவா செய்கிறேன் ..............
இந்த இளம் வயதில் இப்படி ஒரு செயல் திறன் பெற்றவரா என்றும் யாம் வியப்புடன் ....பெருமைபட்டு ...மீண்டும் .... தங்களை ....வாத்துகிறேன்......
>> தொடரட்டும் தங்களின் வியப்புடைய செயல் பாடுகள் யாவும் <<
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross