காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையருக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மழைக்காலத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருப்பதன் காரணமாக கொசுக்கள் பெருகி தொல்லையளித்து வருவதாகவும், மின்தடை நேரங்களில் அதன் தொல்லை அதிகளவில் உள்ளதாகவும், இதனால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள அம்மனுவில், கொசுக்களை ஒழிக்க கொசு ஒழிப்பு புகை அடித்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கேட்டுக்கொண்டுள்ளார். |