நகரில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் - பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இதனால் நோய்கள் பரவாமல் இருக்க காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் இன்று (நவம்பர் 26) கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நகராட்சி ஊழியர் - கொசு ஒழிப்பு கருவியினை மிதிவண்டியில் பொருத்தி, ஒவ்வொரு தெருவாக சென்று, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டார்.
பணியினை மேற்கொண்டதற்கு சாட்சியாக பொதுமக்களிடம் இருந்து ஊழியர் கையெழுத்தும் பெற்றுக்கொண்டார்.
நமது நகராச்சியால் இந்த மழை கால சூழ் நிலைமைக்கு கண்டிப்பாகவே தேவையான ஒரு நல்ல செயல் ...பொது மக்களால் பாராட்ட பட கூடிய ஓன்று தான் .....
ஆனால் இந்த சின்ன ஒரு மிஷினை வைத்து கொண்டு எப்படி இவ்வளவு பெரிய ஊரை கவர் பண்ண முடியும் .... வட மாநிலத்தில் எல்லாம் டெம்போவில் பெரிய மிஷினை ஏற்றி கொண்டு தான் ....இந்த கொசு மருந்து அடிப்பார்கள் அதன் புகை அந்த ஏரியாவை பூராவுமே கவர் பண்ணும் ....மேலும் '' அப்புகை ''இன் வாடையும்..... புகையின் தன்மையும் நியாயமான நேரத்துக்கு அந்த ஏரியா பூராவும் நிற்கும் ......நமது நகராச்சி தான் வளர்ச்சி பெற்று உள்ளதே தவிர ....கொசு ஒழிப்பு தன்மை அப்படியே தான் உள்ளது என்றே கூறலாம் ...
நமக்கு ஓன்று இல்லாததுக்கு இது போதும் என்று நாம் நினைத்து கொள்ள வேண்டியது தான் ............
3. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்)[27 November 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 31700
கொசு மருந்து அடித்த பிறகு, வீட்டில் கொசு தொல்லை மற்ற நாட்களை விட அதிகம் காணப்பட்டது. தெருக்களில் திரிந்த கொசுக்கள் அனைத்தும் அலறிப்புடைத்து வீடுகளில் தஞ்சம் அடைந்து விட்டன.
கொசுக்களின் உற்பத்தி மன்றமான மழை நீர் தேக்கம், குப்பைகள் தங்கி இருக்கும் கழிவு குட்டைகள் ஆகியவற்றை சரி செய்யாத நிலையில், இது மாதிரி கொசு மருந்து அடித்து செல்லுவது என்பது எந்த வகையில் பிரயோஜன செயலாக இருக்கும் என்பது தெரியவில்லை.
அப்புறம், இந்த கொசு உள்ளதே மிகவும் புத்திசாலியும் பலசாலியும் கூட. சிலந்தி வலையில் அனைத்து பூச்சிகளும் மாட்டிக்கொள்ளும், ஆனால் கொசு மட்டும் மாட்டவே மாட்டாது. அப்படி மாட்டினாலும் சுலபமாக தப்பித்துக் கொள்ளும்.
கூடுதல் விசயம், இதன் ஆயுள் காலம் 2 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரையும் தானாம். இந்த குறுகிய வாழ்நாட்களில் LKG அட்மிசன் வாங்கி, தொடர்ந்து, +2 முடித்து, திருமணம் நடைபெற்று, பல ஆயிரம் சந்ததிகளை உருவாக்கிவிட்டு, நம்முடைய இரத்தங்களை உறிஞ்சி, இப்படி கமெண்ட்ஸ் டைப் பண்ணவைத்து, மடிந்து விடுகின்றன.
5. Re:...பெருமை படுவோமே...! posted byOMER ANAS (DOHA QATAR..)[27 November 2013] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 31705
கூட்டாளி, KTN எம்மாம் பெரிய சளிக்கு, இம்மாம் துண்டு மூக்கு பொடி போடுறது இல்லையா,,! இது எல்லாம் ஒரு நம்பிக்கைதான். ஊட்டாண்ட இது பற்றி ஃ போன் போட்டு கேட்டா,,, ஜியா காக்கா கொசு ஒழிப்புக்கு கையெழுத்து போட்டாலும் போட்டோ, நாங்க இரவு பூரா இந்த கொசு ஊடடுக்குள்ளே வந்துரக்கூடாது என்று ஜன்னல அடைச்சு ஒழிந்து கொண்டோம் என்கிறாங்க!
இதற்க்கு தீர்வு...!?
ஊர் நன்மைக்காக போராடும் அனைத்து காயல் நல மன்றங்களும் இணைந்து இது போன்ற காலங்களில் நகராட்ச்சியை மட்டுமே நம்பாமல், நல்ல pest control சாதனங்களை ஒன்றாக இணைந்து வாங்கி, தண்ணீர் தேங்கும் இடங்களில் இருந்து பம்ப் செட் மூலம் தண்ணீரை வெளியேற்றவும், தேங்கும் தண்ணீரில் கொசு பரவாமல் இருக்க மருந்து தெளிக்கவும், நல்ல மிசின்களை வாங்கி தினமும் ஒரு முறை இது போன்ற புகை மூட்டம் மூலம் தொடர்ந்து செய்தால்,நிச்சயம் நம்மால் 50%நோய் தீர்க்க முடியுமே..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross