காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) சார்பில், கழிவு மேலாண்மை கருத்தரங்கம், இம்மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, கழிவு மேலாண்மை குறித்து உரையாற்றினார்.
தூத்துக்குடி தேசிய மாணவர் படை சார்பில் ஹவில்தார் குமார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் முஹம்மத் ஸித்தீக் வாழ்திப் பேசினார். பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ஷேக் பீர் முஹம்மத் காமில் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தேசிய மாணவர் படையினர் உள்ளிட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் ஆனந்தக்கூத்தன், பரமசிவன், ஞானியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ
ஆசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி. |