சிறுபான்மையினருக்கு வியாபாரம், தொழில் தொடங்க, அபிவிருத்தி செய்ய தனி நபர் கடன், கல்விக்கடன், சுயவுதவி குழு உறுப்பினர்கள் கடன் போன்றவற்றை வழங்க சிறப்பு முகாம் நவம்பர் 30 சனிக்கிழமை அன்று தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் சிறுபான்மையின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர மரபினர் இன மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க சிறப்பு முகாம் எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வைத்து 30.11.2013 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மேற்படி முகாமில் கீழ்க்கண்ட கடன் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகளை என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் மேற்கண்ட விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர மரபினர் இன மக்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களுடன் மேற்கண்ட சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு கடனுதவி பெற்று பயன் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தகவல்:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
தூத்துக்குடி.
|