ஐசன் வால்நட்சத்திரம் (COMET ISON; C/2012 S1) - சூரியனுக்கு மிக அருகாமை நிலையை (PERIHELION) நேற்றிரவு (நவம்பர் 28) அடைந்தது.
ஆரம்ப தகவல்கள் - சூரியனின் வெப்பமும், அதன் ஈர்ப்பு சக்தியும், ஐசன் வால்நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிட்டதாக தெரிவித்தன.
தப்பிக்கவில்லை என வெளியான BBC செய்தி...
தப்பிக்கவில்லை என வெளியான FOXNEWS செய்தி...
இருப்பினும் - பின்னர் வெளியான படங்களும், தகவல்களும் - ஐசன் வால்நட்சத்திரம், குறிப்பிடும்படியான அளவில் தப்பித்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.
தப்பித்ததாக வெளியான டிவிட்டர் செய்தி...
ஐசன் வால்நட்சத்திரம் சூரியனின் வெப்பம், ஈர்ப்பை விட்டு வெளியில் வருவதாக காட்டும் காட்சி ...
இந்த வால்நட்சத்திரம் தப்பித்ததா? டிசம்பரில் காட்சி தருமா? போன்ற கேள்விகளுக்கான விடை அடுத்த சில மணி நேரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. |