தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை காரணாக சென்னையில் வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 2) முதல் 2 மணி நேர மின்வெட்டு அமல் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுழற்சி முறையில் மின்வெட்டு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழையும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மின் பயன்பாடும் குறையவில்லை.
இந்த காரணங்களால் தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் அதிகமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர பிற இடங்களில் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மின் பற்றாக்குறையைச் சமாளிக்க சென்னையில் மீண்டும் மின்வெட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டால், வெளியூர்களில் மின்வெட்டு 4 மணி நேரமாகக் குறையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
2,300 மெகா வாட் பற்றாக்குறை:
தமிழகத்தில் இப்போது மின் பற்றாக்குறை 2,300 மெகா வாட் அளவுக்கு மேல் உள்ளது. மின் தேவை இப்போது 12,118 மெகா வாட் என்ற அளவில் உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) நிலவரப்படி அதிகபட்ச மின் உற்பத்தி 9,736 மெகாவாட் என்ற அளவிலேயே உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தினமும் 2,000 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்கும் அளவுக்கு மின் வெட்டு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
5 மாதங்களுக்குப் பின்...
கடும் மின் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் பல மாதங்கள் மின் வெட்டு அமலில் இருந்து வந்தது. சென்னையில் 2 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 7 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு, பாதிக்கப்பட்டிருந்த அனல் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்தது, புதிய திட்டங்களில் மின் உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் மின் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்தது.
இதன் காரணமாக சென்னையில் அமலில் இருந்த 2 மணி நேர மின்வெட்டு கடந்த ஜூலை மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. இதுபோல் பிற மாவட்டங்களிலும் படிப்படியாக மின் வெட்டு குறைக்கப்பட்டது.
ஆனால், காற்றாலை மின் உற்பத்தி முழுவதுமாக நின்றது, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மீண்டும் மின் வெட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் மற்றும் இடங்களின் விவரம்:
காலை 8 மணி முதல் 10 மணி வரை:
புரசைவாக்கம் (பகுதி), தேனாம்பேட்டை (பகுதி), அண்ணாசாலை (பகுதி), கதீட்ரல் சாலை (பகுதி), தியாகராயநகர், பாண்டிபஜார், தெற்கு உஸ்மான் சாலை, எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவென்யூ, கிரீன்வேஸ் சாலை, ராணி மெய்யம்மை டவர், ஸ்ரீவாசா அவென்யூ, கிரீம்ஸ் சாலை (பகுதி), ஒயிட்ஸ்சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை, எத்திராஜ் சாலை, காமராஜர் சாலை, மயிலாப்பூர், பூக்கடை, பாரிமுனை, எஸ்பிளனேடு, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லட்சுமிபுரம், செம்பியம் (பகுதி).
மணலி, வியாசர்பாடி (தொழிற்பேட்டை), ஜி.எஸ்.டி.சாலை (பகுதி), நேரு நகர், கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், கடப்பேரி, மெப்ஸ் பகுதி, கிழக்குக் கடற்கரை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, போரூர், ஆற்காடு சாலை (பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி (தொழிற்பேட்டை), நெல்சன் மாணிக்கம் சாலை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), சூளைமேடு (பகுதி), பாடி (பகுதி), கொரட்டூர், கோயம்பேடு மார்க்கெட், சின்மயாநகர், நடேசன் நகர், பாண்டேஸ்வரம் பகுதி, புழல், செங்குன்றம் (பகுதி), சோத்து பெரும்பேடு.
காலை 10 மணி முதல் 12 மணி வரை:
அண்ணாசாலை (பகுதி), ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, அரசினர் தோட்டம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, சைதாப்பேட்டை, சி.ஐ.டி. நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை சாலை, லாயிட்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, ஒயிட்ஸ் சாலை, வடபெரும்பாக்கம், மணலி, டி.எச். சாலை (பகுதி), பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.கே.எம். காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, திருவொற்றியூர், கோட்டூர்புரம், டர்ன்புல்ஸ் சாலை, கஸ்தூரிபாய் நகர், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், பல்லாவரம், போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பெரும்பாக்கம், திருமுடிவாக்கம், கீழ்கட்டளை, நன்மங்கலம், கோவிலம்பாக்கம், விஜயநகர், வேளச்சேரி நெடுஞ்சாலை, தண்டீஸ்வரம்.
அண்ணாநகர் (பகுதி), கே.ஜி.சாலை, புதிய ஆவடி சாலை, மேடவாக்கம் டேங் சாலை, வானகரம், மதுரவாயல், முகப்பேர் கிழக்கு, பட்டாபிராம், திருநின்றவூர் (பகுதி), திருவள்ளூர் நெடுஞ்சாலை, செங்குன்றம், திருவேற்காடு, அண்ணாநகர் (பகுதி).
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை:
ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை (பகுதி), லஸ் (பகுதி), இந்திராநகர் (பகுதி), மயிலாப்பூர் (பகுதி), பெல்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம், காமராஜ் சாலை, மந்தைவெளிப் பகுதி, சென்னை உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மீனியன் தெரு, ஏழுகிணறு, மண்ணடி, அண்ணாசாலை (பகுதி), ஸ்பர்டேங்க் சாலை, எழும்பூர் (பகுதி), நுங்கம்பாக்கம் (பகுதி), மகாலிங்கபுரம், காம்தார்நகர், திருமலைப்பிள்ளை சாலை, தியாகராய நகர் (பகுதி), மேற்கு மாம்பலம், மேட்லி சாலை, ஜூப்ளி சாலை, அசோக்நகர் (பகுதி).
கே.கே.நகர் (பகுதி), எண்ணூர், தண்டையார்பேட்டை, மாத்தூர், வில்லிவாக்கம் சிட்கோ, ஆர்.கே. நகர், கோவூர், குன்றத்தூர், மாங்காடு, கெருகம்பாக்கம், குமணன்சாவடி, பூந்தமல்லி, நூம்பல், காடுவெட்டி, புதுதாங்கல், ஆளுநர் மாளிகை, பரங்கிமலை, ஆதம்பாக்கம் (பகுதி), மீனம்பாக்கம், துரைப்பாக்கம், ஆவடி (பகுதி), ஆவடி டாங்கி தொழிற்சாலை, திருமுல்லைவாயல் (பகுதி), சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), அம்பத்தூர், பட்டரவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், முகப்பேர் (பகுதி).
பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை:
சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலை (பகுதி), புதுப்பேட்டை, எழும்பூர் (பகுதி), சிம்சன், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செகரேட்டரியட் காலனி, பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), அண்ணாசாலை (பகுதி), எஸ்.எம். நகர், கே.பி.தாசன் நகர், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் தியாகராய நகர் (பகுதி), எல்டாம்ஸ் சாலை, பெரியமேடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (பகுதி), கதீட்ரல் சாலை (பகுதி), ஜி.என்.செட்டி சாலை (பகுதி), கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, மீர்சாகிப்பேட்டை, அமீர் மஹால், பாரதிசாலை (பகுதி), தங்கசாலை, கொண்டித்தோப்பு, ஜகதாபுரம், பெரம்பூர் (பகுதி), கொளத்தூர் (பகுதி), அயனாவரம், வில்லிவாக்கம், ஐ.சி.எஃப், ராயபுரம் (பகுதி), ஆலந்தூர், கே.கே. நகர் (பகுதி), கிண்டி (பகுதி), எம்.ஜி.ஆர். நகர், மேற்கு மாம்பலம் (பகுதி), அசோக்நகர் (பகுதி), பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குடி, தாம்பரம், இந்திராநகர், பூந்தமல்லி (பகுதி), நாசரேத்பேட்டை, நங்கநல்லூர் (பகுதி), ஆதம்பாக்கம் (பகுதி), விருகம்பாக்கம், தசரதபுரம், வடபழனி, ஆற்காடு சாலை (பகுதி), பெசன்ட் நகர், அண்ணாநகர் (பகுதி), ஷெனாய் நகர், டி.பி.சத்திரம், அயப்பாக்கம், மகாலிங்கபுரம் (பகுதி), சின்மயா நகர், ஜெகந்நாத நகர், நூறடி சாலை, கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், திருமங்கலம்.
மாலை 4 மணி முதல் 6 மணி வரை:
கல்லூரி சாலை, கிரீம்ஸ் சாலை(பகுதி), எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை (பகுதி), புரசைவாக்கம் (பகுதி), எம்.எம்.டி.ஏ. காலனி (பகுதி).
என்.எஸ்.சி. போஸ் சாலை, மயிலாப்பூர் (பகுதி), லஸ் (பகுதி),லோட்டஸ் காலனி, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை, தியாகராய நகர் (பகுதி), சி.ஐ.டி. நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (பகுதி), ஜாபர்கான்பேட்டை, கே.கே. நகர் (பகுதி), சைதாப்பேட்டை மேற்கு, கொடுங்கையூர், எஸ்பிளனேடு (பகுதி), ராயபுரம் (பகுதி), மாதவரம், திரு.வி.க. நகர், வியாசர்பாடி (பகுதி), சுங்கச்சாவடி, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், ஈஞ்சம்பாக்கம், கிண்டி தொழிற்பேட்டை, சூளைமேடு (பகுதி), கோடம்பாக்கம், வடபழனி, அசோக்நகர் (பகுதி), டிரஸ்ட்புரம், மடிப்பாக்கம், பெருங்களத்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம், சிருசேரி எஸ்டேட், இந்திராநகர் (பகுதி), கலாஷேத்ரா காலனி, அவ்வை நகர், கணபதி நகர், பாலவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை (பகுதி), முகப்பேர், திருமங்கலம் (பகுதி), நொளம்பூர், பாடி.
தகவல்:
தினமணி |