உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு டிசம்பர் 06ஆம் நாளன்று மாலை 04.30 மணிக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் - தூத்துக்குடி விவிடி மெயின் ரோடு அண்ணா நகர் சந்திப்பில் நடைபெறவுள்ளது.
அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அதன் மாநில பேச்சாளர் சிவகாசி முஸ்தஃபா சிறப்புரையாற்றவுள்ளார். இதுகுறித்த பிரசுரம் வருமாறு:-
படம்:
M.ஜஹாங்கீர் |