காயல்பட்டினம் கடற்கரையில் வாகனங்களை நிறுத்துவதற்காக, கடற்கரை நுழைவாயிலுக்கு முன்புறத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எல்லைக் கோடு வரையப்பட்டது.
அடுத்த சில மாதங்கள் வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை எல்லைக் கோட்டுக்குள் நிறுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தமது இரு சக்கர வாகனங்களை, எல்லைக் கோட்டையும் தாண்டி நிறுத்துவதைப் பழக்கமாக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், கடற்கரையில் விளையாடுவதற்காக வருகை தரும் பள்ளி மாணவர்கள் சிலர், நுழைவாயில் படிக்கட்டு தடுப்பையுமு் தாண்டி கடற்கரையின் உட்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தமது மிதிவண்டிகளை நிறுத்தத் துவங்கியுள்ளனர்.
|