காயல்பட்டினத்தில் 5 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று (நவம்பர் 30ஆம் தேதி) இரவு 19.00 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இம்மழை காரணமாக, கடற்கரையில் ஆங்காங்கே அமர்ந்திருந்த பொதுமக்கள், அதன் வட தென் புறங்களிலுள்ள மண்டபங்களில் தஞ்சமடைந்தனர். கடற்கரை மணற்பரப்பில் அடுப்பு வைத்து தின்பண்டங்கள், பானங்கள் விற்பனை செய்வோர், கடைகளை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு மழைக்கு ஒதுங்கினர்.
நேற்றிரவு 22.10 மணியளவில் மீண்டும் மழை தொடர்ந்தது. பெரும்பாலும் தூறலாகவும், அவ்வப்போது இதமழையாகவும் பெய்த நிலையில், டிசம்பர் 01 நள்ளிரவு 00.50 மணியளவில் அது கனமழையாக மாறி, நீண்ட நேரம் பெய்து ஓய்ந்தது.
இம்மழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. காட்சிகள் வருமாறு:-
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
முந்தைய மழைச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |