சஃபர் (1435) மாத அமாவாசை டிசம்பர் 3 செவ்வாய்க்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12:22 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் டிசம்பர் 3 அதிகாலை 5:53 மணி.
டிசம்பர் 3 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:57 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:27. சந்திரனின் வயது சுமார் 12 மணி நேரம். அன்று காயல்பட்டினத்தில் சூரியன் மறைந்து 30 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைந்தாலும், வெறுங்கண்ணால் பிறையை காண இயலாது.
அன்று - ஆப்ரிக்கா கண்டத்தின் தென் மற்றும் தென் கிழக்கு பகுதி தவிர்த்து இதர பகுதிகளிலும், வட, தென் அமெரிக்க கண்டங்களின் தென் கோடி பகுதிகளை தவிர்த்து பெருவாரியான பகுதிகளிலும் - வெறுங்கண்ணால் பிறையை எளிதாக காணலாம்.
டிசம்பர் 4 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:57 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:29. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 36 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 92 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால்
எளிதாக காணலாம்.
அன்று ஏறத்தாழ உலகின் அனைத்து பகுதிகளிலும் - வெறுங்கண்ணால் பிறையை எளிதாக காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கும் (Hijra Committee, Kerala), மற்றொரு விதிமுறை அடிப்படையில்
பிறையினை கணக்கிடும் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for
Fatwa and Research [ECFR], Conseil Français du Culte Musulman அமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சாராருக்கும் டிசம்பர் 4 - சஃபர் 1
ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு டிசம்பர் 3 (அமாவாசை) அன்று முஹர்ரம்
29 பூர்த்தி ஆகிறது. ஆப்ரிக்கா கண்டத்தின் தென் மற்றும் தென் கிழக்கு பகுதி தவிர்த்து இதர பகுதிகளிலும், வட, தென் அமெரிக்க கண்டங்களின் தென் கோடி பகுதிகளை தவிர்த்து பெருவாரியான பகுதிகளிலும் - வெறுங்கண்ணால் பிறையை அன்று எளிதாக காணலாம். அப்பகுதிகளில் டிசம்பர் 3 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் முஹர்ரம் 29 பூர்த்தி செய்து, டிசம்பர் 4 அன்று சஃபர் மாதம் துவக்குவர். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் - டிசம்பர் 4 அன்று முஹர்ரம் 30 பூர்த்தி செய்து, டிசம்பர் 5 - சஃபர் மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு டிசம்பர் 3 (அமாவாசை) அன்று முஹர்ரம் 28 பூர்த்தி
ஆகிறது. டிசம்பர் 4 அன்று காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். அவ்வாறு பிறையைக்கண்டால் டிசம்பர் 4 அன்று அவர்கள் முஹர்ரம் 29 பூர்த்தி செய்வர். டிசம்பர் 5 சஃபர் மாதம் துவக்குவர். வானிலை சூழல் காரணமாக அன்று பிறை தென்படவில்லை எனில் - டிசம்பர் 5 அன்று முஹர்ரம் 30 பூர்த்தி செய்து, டிசம்பர் 6 சஃபர் மாதம் துவக்குவர்.
முஹர்ரம் 1435 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும் |