மாநில அளவில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளார். இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மனிதவள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைப்பின் சார்பில், பள்ளி மாணவ-மாணவியருக்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி, 10.09.2013 அன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 355 பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்ற இப்போட்டியில், எமது பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி ஸஃப்ரீன் முதலிடம் பெற்று, சான்றிதழ் மற்றும் பணப்பரிசு பெற்றார்.
இதே போட்டியில்,
எம்.ஏ.பி.ஃபாத்திமா ஜுலைஹா (எல்.கே.ஜி.),
எம்.ஏ.கதீஜா பீவி (யு.கே.ஜி.),
எம்.எம்.அஹ்மத் நஷாத் (01ஆம் வகுப்பு),
ஏ.எம்.அஸ்மா ஜுஹைஃபா (02ஆம் வகுப்பு),
எம்.எம்.மஹ்மூத் நெய்னா (03ஆம் வகுப்பு),
எஸ்.ஆயிஷா முஷாகிரா (04ஆம் வகுப்பு),
எம்.ஏ.ஃபாத்திமா முஸத்திகா (05ஆம் வகுப்பு),
டி.எம்.ஆமினா அஃப்ரா (06ஆம் வகுப்பு),
எம்.எல்.ஸதக் அலீ ஃபாத்திமா (07ஆம் வகுப்பு),
எம்.மர்யம் முஃப்லிஹா (08ஆம் வகுப்பு),
எச்.ஏ.பி.ஸாரா சுமய்யா (09ஆம் வகுப்பு),
ஏ.எம்.ஃபாத்திமா ஃபஸீஹா (10ஆம் வகுப்பு),
எஸ்.ஜெ.அனிஷா விர்ஜின் மேரி (12ஆம் வகுப்பு)
ஆகிய மாணவ-மாணவியர் கூடுதல் முதல் பரிசு பெற்றுள்ளனர்.
பரிசு பெற்ற மாணவ-மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |