உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு டிசம்பர் 06ஆம் நாளன்று, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், “பாபரி மஸ்ஜித் மீட்பும், ஃபாசிச எதிர்ப்பும் தேசத்தின் கடமை” எனும் தலைப்பில், கருத்தரங்கம் - தூத்துக்குடி திரேஸ்புரத்திலுள்ள மரைக்காயர் மஹாலில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹ்மத் ஃபக்ருத்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சொ.சு.தமிழினியன், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
தகவல்:
H.ஷம்சுத்தீன்
தூ-டி மாவட்ட தலைவர் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)
கடந்தாண்டு (2012) டிசம்பர் 06 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |