ஐசன் வால்நட்சத்திரம் (COMET ISON; C/2012 S1) - சூரியனுக்கு மிக அருகாமை நிலையை (PERIHELION) நவம்பர் 28 இரவு அடைந்தது.
ஆரம்ப தகவல்கள் - சூரியனின் வெப்பமும், அதன் ஈர்ப்பு சக்தியும், ஐசன் வால்நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிட்டதாக தெரிவித்தன.
இருப்பினும் - பின்னர் வெளியான படங்களும், தகவல்களும் - ஐசன் வால்நட்சத்திரம், குறிப்பிடும்படியான அளவில் தப்பித்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.
பெருமளவில் சேதம் அடைந்துள்ளதாக கருதப்படும் ஐசன் நட்சத்திரம், வெறுங்கண்கள் கொண்டு காணும் அளவை அடையுமா எனக்கூற ஓரிரு தினங்கள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐசன் வால்நட்சத்திரத்தின் இன்றைய நிலை (மதியம் இந்திய நேரம் 12:24 மணிக்கு SOHO விண்கலம் எடுத்த படம்) ...
ஐசன் வால்நட்சத்திரத்தின் இன்றைய நிலை (காலை இந்திய நேரம் 11:00 மணிக்கு SOHO விண்கலம் எடுத்த படம்) ...
ஐசன் வால்நட்சத்திரத்தின் இன்றைய நிலை (காலை இந்திய நேரம் 5:49 மணிக்கு SOHO விண்கலம் எடுத்த படம்) ...
|