காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் முறைக்கேடுகள் நடைபெறுவதாக பெறப்பட்ட புகாரினை தொடர்ந்து - நவம்பர் 27 புதன்கிழமையன்று, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) ரகு மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் உடனிருந்தார்.
இந்த பரிசோதனையின் போது முறைக்கேடுகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து காயல்பட்டணம்.காம், தாலுகா விநியோக அலுவலர் ரகுவிடம் வினவியதற்கு, அவர் இது குறித்த விசாரணையை பறக்கும்படை அலுவலர்கள் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் தங்கள் அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியவுடன், அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சுமார் 10,000 ரூபாய் அளவில் முறைக்கேடு நடந்திருக்கலாம் என அறியப்படுகிறது.
புகைப்படங்களில் உதவி:
ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி |