நெல்லை மாவட்டம் திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையமருகில் - ரூ.73 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிதாக பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது. முஸல்லாவுக்கு ரூபாய் 7 ஆயிரம் என்றும், சதுர அடிக்கு ரூபாய் 1176 என்றும் செலவு மதிப்பீடு பிரிக்கப்பட்டு, நன்கொடைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிவாசல் கட்டிடக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ். இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய இஸ்லாமிய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக!
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் பள்ளிவாசல் அமைவதன் அவசியம்:
நெல்லை மாவட்டம் திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்தே இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இப்பேருந்து நிலையம் எப்போதும் அதிக மக்கள் திரளுடன் காட்சியளிக்கிறது.
அதுபோல, இப்பேருந்து நிலையம் அருகிலேயே பாஸ்போர்ட் அலுவலகமும் புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வருவதால், பேருந்து நிலையப் பகுதி எல்லா நேரங்களிலும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
ஜங்ஷன் பேருந்து நிலையம் மட்டும் இருந்த வரை, அதனைப் பயன்படுத்திய நமது மக்களுக்கு தொழுகை நேரங்களில் - அருகிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று வருவது இலகுவாகவே இருந்தது. ஆனால், புதிய பேருந்து நிலையம் இயங்கத் துவங்கிய நாள் முதல் – அருகிலுள்ள சுற்றுவட்டாரத்தில் பள்ளிவாசல் எதுவுமில்லாததால் குறித்த நேரத்தில் தொழுகைகளை நிறைவேற்ற இயலாமல் நம் சமுதாய மக்கள் அவதியுற்று வருகின்றனர். பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் நம் சமுதாய மக்கள் அதிகளவில் வந்து செல்வதால், அருகில் பள்ளிவாசல் எதுவுமில்லாதிருப்பது பெரும் கைசேதமாகவே இருந்தது.
புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா:
அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளிவாசல் ஒன்று இப்பகுதியில் அமையப்பெற வேண்டும் என்ற கவலை பலருக்கும் எழுந்ததையடுத்து, திருநெல்வேலி - நாகர்கோவில் நெடுஞ்சாலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரிலுள்ள உமா சங்கர் ஹோட்டலுக்குப் பின்புறத்தில் எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் - ரூபாய் 73 லட்சம் செலவு மதிப்பீட்டில் இரண்டு மாடிகளைக் கொண்ட - சுற்றுச்சுவருடன் கூடிய பள்ளிவாசல் கட்டிடத்திற்கு 12.04.2013 அன்று உலமா பெருமக்கள் மற்றும் இறை நல்லடியார்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, நல்லுள்ளங்கொண்டோரின் நன்கொடைகளைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது.
செலவு மதிப்பீட்டு விபரம்:
இதற்கான செலவு மதிப்பீடு விபரம் வருமாறு:-
[மேலேயுள்ள படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
கட்டிட திட்ட வடிவமைப்பு:
புதிதாகக் கட்டப்பட்டு வரும் இப்பள்ளிவாசலின் தரைதளம், முதல் மாடி, இரண்டாம் மாடி ஆகியவற்றின் ப்ளான் - திட்டப்படமும், அக்கட்டிடத்தில் அமைக்கப்படவுள்ள கதவுகள் - சாளரங்களின் மாதிரி வடிவமைப்புப் படங்களும் வருமாறு:-
இந்த மாதிரி வடிவமைப்பின் படி கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
[மேலேயுள்ள படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
புதிய பள்ளிவாசலால் விளையப்போகும் பயன்கள்:
இன்ஷாஅல்லாஹ், இப்பகுதியில் இப்பள்ளிவாசல் அமைவதால் விளையப்போகும் பயன்கள்:-
>> புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் முஸ்லிம்கள் குறித்த நேரத்தில் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றலாம்...
>> பாஸ்போர்ட் அலுவலகம் வந்து செல்வோர் குறித்த நேரத்தில் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றலாம்...
>> இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புவோர், சுத்தமாகப் பராமரிக்கப்படும் பள்ளிவாசல் கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம்...
>> பயணக்களைப்பில் இருப்போர் பள்ளி வளாகத்தில் இறை நினைவுடன் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்லலாம்...
>> 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள முதலுதவி மையம் மூலம் - தேவைப்படுவோர் மருத்துவ உதவிகளைப் பெறலாம்...
>> தனியாக அமைக்கப்படும் தொழுகை தளத்தில் பெண்களும் தொழுகைகளை நிறைவேற்றலாம்...
>> துவக்கமாக ஐவேளைத் தொழுகை நடத்தப்பட்டு, நாளடைவில் ஜும்ஆ தொழுகைப் பள்ளியாக இயக்கப்படுவதால், வெள்ளிக்கிழமைகளில் - ஆங்காங்கே அலைச்சலின்றி எளிதாக ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றலாம்...
>> புனித ரமழான் மாதங்களில் ஸஹர் - நோன்பு நோற்பு, இஃப்தார் - நோன்பு துறப்பு ஆகியவற்றுக்கு ஹோட்டல் - உணவு விடுதிகளைத் தேடித் திரியாமல், பள்ளிவாசலிலேயே இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளலாம்...
இன்னும் பல!
இத்தனை தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டு வரும் இப்பள்ளிவாசலுக்கு உங்கள் யாவரின் தாராள நன்கொடைகள் உரிமையுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்கொடை செலுத்த எளிய வழிமுறைகள்:
>> தனவந்தர்கள் பெருமளவில் இதற்காக உதவலாம்.
>> நடுத்தர மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்கிடுவதற்காக, பள்ளியின் மொத்தச் செலவு மதிப்பீட்டுத் தொகையை வகைப்படுத்தி,
ஒரு நபர் தொழுவதற்கான இடத்திற்கு (முஸல்லா) ரூபாய் 7,000/-
என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
>> ஏழை-எளியோரும் இக்கட்டிடப் பணியில் பங்களிப்பு செய்வதற்காக, மொத்த செலவு மதிப்பீட்டுத் தொகையை வகைப்படுத்தி,
ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1,176/-
என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரிமையுடன் வேண்டுகோள்:
அன்பான சகோதர-சகோதரிகளே...!
நம் யாவரின் நீண்ட நாள் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் - கருணையுள்ள அல்லாஹ்வின் பேரருளால் உருவாக்கப்பட்டு வரும் இப்பள்ளிவாசல் கட்டிடப் பணியில், உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மேற்சொன்ன ஏதேனும் ஓர் அடிப்படையில் இடம்பெற வேண்டும் என நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இந்த விபரங்களை முழு கவனத்துடன் படிக்கும் உங்கள் யாவருக்கும் வல்ல அல்லாஹ் அதற்கான எண்ணத்தை நிச்சயம் மனதில் போடுவான். அதனடிப்படையில், இதற்காக உங்கள் தாராள பங்களிப்பை வழங்கி,
“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பள்ளியின் கட்டிடப் பணியில் நானும் பங்கேற்றுள்ளேன்” என்ற பெருமிதத்தை இவ்வுலகிலும், “அல்லாஹ்வுக்காக பூமியில் யார் ஒரு வீட்டைக் கட்டுகிறாரோ, அவருக்காக சுவனத்தில் ஒரு மாளிகையை அல்லாஹ் எழுப்புவான்” என்ற கருத்தில் நம் உயிரினும் இனிய உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்த படி மகத்தான நற்கூலியை மறுமையிலும் பெற்றிட, இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்கள் யாவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம்.
தொடர்பு விபரங்கள்:
நன்கொடைகளை அளிக்க விரும்புவோர்,
(1)
ஜனாப் கே.எம்.ஏ.நிஜாம்
(தலைவர்)
[கைபேசி எண்: +91 94420 18099]
(2)
ஹாஜி எம்.அப்துல் கரீம்
(நிர்வாக உறுப்பினர்)
[கைபேசி எண்: +91 94425 25525]
(3)
ஹாஜி சிக்கந்தர் மீரான்
(நிர்வாக உறுப்பினர்)
[கைபேசி எண்: +91 94425 51297]
(4)
ஜனாப் எம்.பி.காதர் அவ்லியா
(நிர்வாக உறுப்பினர்)
[கைபேசி எண்: +91 94879 91786]
ஆகியோருள் ஒருவரை அவர்களது கைபேசி எண்ணிலோ
அல்லது
masjidurrahaman0786@gmail.com
abdulkareemmg@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிகளிலோ தொடர்புகொண்டு, உங்கள் மேலான நன்கொடைகளை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் உளத்தூய்மையான இப்பணியை எளிதாக நிறைவேற்றித் தந்து, அதனை அவனருளால் ஏற்றுக்கொண்டு (கபூல் செய்து), அதற்கான நற்பலன்களை இம்மை - மறுமையில் நம் யாவருக்கும் நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
குறிப்பு: தேவைப்படும் நன்கொடைகள் முழுமையாகப் பெறப்பட்டுவிட்டால், நன்கொடை பெறுதல் நிறுத்தப்பட்ட செய்தி அனைவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும் என்பதை இதன்மூலம் அறியத் தருகிறோம்.
இவ்வாறு, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசல் கட்டிடக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி T.M.S.சுல்தான்
காயல்பட்டினம்.
தொகுப்புதவி:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ அப்துல் மாலிக்
காயல்பட்டினம். |