Re:... posted byVilack SMA (Hetang , Jiangmen , PRC)[23 November 2013] IP: 121.*.*.* China | Comment Reference Number: 31637
மாமாவின் கட்டுரை பசுமையான நினைவலைகள் . மத்திய காயல் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள் . இந்த பகுதியின் பெரும்பாலானவர்கள் தோல் வியாபாரிகள் . ஆனால் , தனது வாரிசுகளுக்கு , இந்த தொழில் பற்றிய முறையான தொழில்நுட்ப கல்வி அறிவை கொடுக்காததால் இந்த தொழில் நமதூர் மக்களிடம் தற்போது இல்லை . ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், ஒன்றிரண்டு பேர் இந்த தொழில் செய்கின்றனர் .
கத்தீபு உமர் கம்பெனி , LMS கம்பெனி , M M கம்பெனி போன்றவைகள் நாட்டின் மிகப்பெரிய தோல் கம்பெனிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வந்த கம்பெனிகள் . குடும்பங்கள் பெருகியதாலும் , வாரிசுகளுக்கு தொழில் நுட்ப அறிவை கொடுக்காததினாலும் இன்று இந்த கம்பெனிகள் அடியோடு அழிந்துவிட்டது.
எனது மாமனார் மர்ஹூம் S A ஆதம் ஹாஜி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் . அன்று , ஆதம் ஹாஜி வருகிறார் என்றால், பெண்கள் தெருவில் தலை காட்டவே மாட்டார்கள் . ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழ் . பெண்களை கண்டு ஆண்கள் ஒதுங்கும் நிலை .
மேலும் அன்று இருந்த ஊரின் பெரியவர்கள் , கண்ணியத்திற்கு உரியவர்கள் பலரையும் குறிப்பிட்டுள்ளீர்கள் . நன்றி .
8 கடை , .. பெயர் காரணம் சொல்லுங்க மாமா .
சங்கு ஊதுதல் ... ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு காரணம். நள்ளிரவு 1 மணி சங்கை பற்றி சொல்லவில்லையே .
Vilack SMA , ஹேதாங், ஜியான்க்மேன் , சீன மக்கள் குடியரசு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross