Re:...WHERE THERE IS NO FEAR.. posted bymackie noohuthambi (kayalpatnam)[24 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31654
WHERE THERE IS NO FEAR, INTO THAT HEAVEN OF FREEDOM, FATHER, LET MY COUNTRY AWAKE!
என்று ரவீந்த்ரநாத் தாகூர் இறைவனிடம் வேண்டிக் கொள்வார். எங்கே அச்சமும் பயமும் இல்லையோ அப்படிப்பட்ட சுதந்திர சுவர்க்கத்தில் இறைவா, எனது நாட்டை விழித்து எழ செய்வாயாக என்பது அதன் சுருக்கமான தமிழாக்கம். ஆனால் நமது தாய் திருநாடு மாறுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டுமோ இறைவனே அறிவான்.
மன்னரகம் என்றும் அமீரகம் என்றும் சர்வாதிகார நாடுகள் என்றும், ஜனநாயகம் பேசுபவர்களால் கேலியாக பேசப்படும் துபாய் அபூதாபி நாடுகளில் அன்னியவர்கள் இப்படி அச்சமற்று ஆடிப் பாடுவதும் திறந்த வெளியில் பசுமை புல் வெளியில் ஒன்று கூடுவதும் நலத்திட்டங்களை வாரி வழங்கி இன்புற்று மகிழ்வதையும் பார்க்கும்போது,
யா, அல்லாஹ் இவர்களுக்கு எல்லா செல்வங்களை நீ வாரி வழங்கிடுவாயாக, அவற்றை நல்ல விஷயங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களையும் கொடுத்து அருள்வாயாக, இந்த நாடும் அதில் வாழும் மன்னர்களும் மக்களும் வளமுடனும், அச்சமில்லாமல் சுதந்திரமாக வாழவும் நீ அருள்புரிவாயாக, நாங்கள் பிறந்த தாய் நாட்டிலும் இப்படி சுதந்திரமாக நாங்கள் வாழ நீ அருள்புரிவாயாக என்று இரு கரம் ஏந்தி து ஆ கேட்கிறோம்.
"நாம் பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம்- வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம்" என்பதை இந்த இன்முகங்கள் நமக்கு கோடிட்டு காண்பிக்கின்றன....வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross