Re:... posted byV. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou)[25 November 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 31664
முன்பெல்லாம் நமதூர் மக்கள் பெரும்பாலானோருக்கு வயல்கள் இருந்தது . ஆனால் ஒருநாள்கூட வயல்வெளியில் இறங்கி வேலை செய்திருக்க மாட்டார்கள் . " உழவன் " என்ற ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு , அவர் சொல்லும் கணக்கையும் , அவர் தரும் நெல் மூட்டைகளையும் வாங்குவார்கள் . அங்கு என்ன நடக்கிறது என்பதே நம்மவர்களுக்கு தெரியாது . நாளடைவில் உழுகின்ற நிலம் உழவனுக்கே சொந்தம் என்ற சட்டத்தால் எல்லா வயல்வெளிகளையும் உழவனுக்கே தாரைவார்த்து விட்டோம் .
இது ஒருபுறம் இருக்க , நம்மவர்கள் பெரும்பாலானோர் வெளியூரிலும் , வெளிநாட்டிலும் வியாபாரம் செய்து வந்தார்கள் . இதுபோன்ற வயல்வெளியைக்காட்டிலும் வியாபாரமே மேலாக தெரிந்தது . இதனால் வயல்வெளியை கவனிக்க ஆளில்லாமல் , நிலங்களை உழவனுக்கு தாரைவார்க்க வேண்டியதாயிற்று .
இன்றும்கூட நம்மவர்களுக்கு பக்கத்து ஊர்களில் தென்னந்தோப்புகள் உள்ளது . அங்கும் அதே கதைதான் . தோட்டக்காரனிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறோம் . அவர் தரும் தேங்காய்தான் கணக்கு . சில சமயங்களில் அதுவும் இல்லை என்பார் .
எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் . தம்பி முஹம்மது இப்ராஹீம் பேட்டியை பார்கையில் இந்த விவசாயத்தில் அவரே நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார் . அதனால்தான் வெற்றி இவருக்கு சாத்தியமாயிற்று .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross