பசுமை விகடன் முந்திவிட்டது! posted byS.K.Salih (Kayalpatnam)[26 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31687
அன்பு நண்பன் 48 இப்றாஹீமின் இந்தச் சாதனைக்குப் பின்னணியில் ஏராளமான அவதிகள் உள்ளதை நான் நன்கறிவேன்.
பொதுவாக, வயசுப் பிள்ளைகள் ஊரிலிருப்பதே கவுரவக் குறைவாகக் கருதப்படும் இக்காலகட்டத்தில், நல்ல தொழில் துறைகளில் கோலோய்ச்சி வரும் இவரது குடும்பத்தாருடன் இணைந்து இவர் வேறு ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துச் சென்றிருக்கலாம். செல்லவும் செய்தார். ஆனால் அவரால் அதில் நிலைக்க இயலவில்லை.
சிறு வயது முதலே அவரை ஆட்கொண்ட பசுமைத் தாகம்தான் இன்று இந்நிலைக்கு அவரை மிளிரச் செய்துள்ளது. இதற்காக அவர் கொடுத்த விலை ஒன்றிரண்டல்ல! நம் ஊரின் பொதுவான மனப்பதிவுடன் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு இதுகுறித்து எடுத்துக்கூறி, அவர்களை சரிகாணச் செய்து, மாதங்கள் பல கடந்த பின்பே மகசூலை எதிர்பார்க்க முடியும் என்றிருந்த நிலையிலும் - செம்பருத்திச் செடியை நவீன பூச்சிக்கொல்லி விஷம் (மருந்து?!) எதையும் தொட்டுக் கூடப் பாராமல் முளைப்பித்து, மகசூலில்லா மாதங்களில் குனிந்த தலை நிமிராமல் குடும்பத்தாருடன் அவர் அளவளாவியது வரை எனக்குத் தெரியும்.
அப்பேர்பட்ட இவரது முயற்சி இன்று திருவினையாகியுள்ளது. கருணையுள்ள அல்லாஹ் இவர் வாழ்நாள் முழுக்க மனம் தளராத அளவுக்கு அபரிமிதமான மகசூலையும், அதன் காரணமாக மகிழ்ச்சியையும் அவர் குடும்பத்தில் திளைக்கச் செய்வானாக. இன்று இவர் பலருக்கு முன்னுதாரணமாகிவிட்டார். இன்ஷாஅல்லாஹ் நாளை இவர் காயலர்களின் பசுமைக் கதாநாயகனாகவும் மாற முடியும். அந்நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்.
ஓரிரு முறை இவரது தோட்டத்திற்கு இணைந்து சென்றேன். அங்கு செம்பருத்தியையும் தாண்டி காணக்கிடைத்த பனங்கிழங்கு, முருங்கைக் கீரை, முருங்கைக்காய், எலுமிச்சம்பழம், நார்த்தங்காய் ஆகியவற்றைக் கபளீகரம் செய்து, குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களோடு திரும்பும் வழமையைக் கொண்டிருந்தேன். ரமழானுக்குப் பிறகு அது தொடரவில்லை. இன்ஷாஅல்லாஹ் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடரும் எனது களப்பணி.
இவரது செம்பருத்தித் தோட்டம் குறித்து விபரங்களைச் சேகரித்து விரிவான செய்தியொன்றை வெளியிட மனதளவில் எண்ணியிருந்தேன். என் எண்ணம் கரையேறுவதற்குள் ‘பசுமை விகடன்’ முந்திக்கொண்டது. இதை விட அது சிறப்புதானே...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross