செய்தி: மீண்டும் தமிழகத்தில் மின் வெட்டு படலம்! தமிழகத்தை இருளில் தள்ள மத்திய அரசு நிறுவனங்கள் சதி செய்வது போன்ற சந்தேகம் எழுந்துள்ளது என பிரதமருக்கு முதல்வர் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:.மூன்றாண்டு சாதனைகள் பேசும் மூவாயிரம் ஆண்டுகள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[27 November 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31706
கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டைக்கூட பொறுக்காத மக்கள் அந்த ஆட்சி அகல பல காரணங்களில் பிரதான காரணமாக மின்வெட்டை முன் நிறுத்தினர்!
கலைஞரை கேட்டால் முந்தய ஆட்சியில் மின் உற்பத்தி செயல் திட்டம் போதுமான அளவு உற்பத்தியை தரவில்லை,மின் கலங்கள் போதிய அளவு நிறுவப்படவில்லை, இது அவர்களின் தவறான ஆட்சியின் விளைவுதான் என்றார்!
ஒரு நாளைக்கு பத்துமணி நேரம் மின்வெட்டாகும் அம்மாவை கேட்டால்,முந்திய ஆட்சியாளரும் ,தற்போது மத்திய அரசும் தான் மின்வெட்டு பாதிப்பு ஏற்பட காரணமானவர்கள் என்கிறார்!
தேர்தல் வாக்குறுதியில் அம்மாவின் வசனம்:
இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழகம் மின்வெட்டில்லாமல்,
இது,நடுநிசியா? நண்பகலா? என்ற அளவிற்கு மின்மிகையுடன்
இரவும் பகல் போல் பளிச்சென்று ஜொலிக்கும்,
முந்திய ஆட்சியாளர்களின் மின்வினியோக ஆட்சித்திறமை இல்லாததினால்தான் இந்தஅவதி, இனி நிம்மதிப் பெறப் போகிறீர்கள். மின்வெட்டின் வேதனையில் இருந்து, .
என்று சபதம் ஏற்று அரியணையில் அமர்ந்த அம்மாவின் ஆட்சி மூன்றாண்டை நெருங்குகிறது.(மூங்கிலால் அமைந்த மேடை சற்று கோணலாக இருக்கிறது ஆகவே இம்மேடை சரியில்லை என்று ஆடத்தெரியாத கலை தொழில் கலைஞன் சொன்னானாம்,அது போல) ,
மத்திய அரசு பழிவாங்குகிறது மகாஜனங்களே நீங்களே கேளுங்க்குள் என்று கோரிக்கை விடுகிறார் மூன்றாண்டின் ஆட்சிப்பலனை மூவாயிரம் ஆண்டுகள் பேசுவார்கள் என்ற பொன்னெழுத்துக்கள் பதிந்த பிரமாண்டமான பேனரில் பட்டி, தொட்டி எங்கும் பூத்து குலுங்கும் புரட்சி தலைவி அம்மா அவர்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross