Re:..இலங்கை சரித்திரம் தெரிந்த ஒரு நடுநிலைவாதி . posted bymackie noohuthambi (kayalpatnam)[29 November 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31726
இங்கு தமிழ் ஈழம் இலங்கையில் மலர வேண்டும் என்று பேசுபவர்கள் கூச்சலிடுபவர்கள் எல்லாம் சந்தர்ப்ப வாதிகள், பச்சோந்திகள்,வெறும் முராரி ராகம் இசைப்பவர்கள் என்பதை துணிச்சலாக எடுத்து சொல்லும் ஆசிரியர் முராரிக்கு வாழ்த்துக்கள்.
வான்படை, கடல்புலிப்படை, தரைப்படை, கன்னி வெடி வைக்கும்படை என்று பல படைகளை வைத்து அடுத்தடுத்து வந்த எல்லா இலங்கை ஆட்சியர்களையும் கதிகலங்க வைத்தவர் பிரபாகரன். அவர் எடுத்து வைத்த கோரிக்கை நியாயமாக இருந்தாலும் அதனை அடைவதற்கு அவர் எடுத்து வைக்க எட்டுக்கள் தவறானவை.hitler type அணுகுமுறை. ஹிட்லர் வெற்றி பெறுவதுபோல் நிகழ்சிகள் வேகமாக நடந்தாலும் அவர் படு தோல்வியை தழுவி தன்னையே மாய்த்து கொண்டார்.
பிரபாகரன் தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு மாபெரும் ஈழ தமிழ் தலைவர்களின் உயிர்களை காவுகொண்டது, தமிழ் மக்களையே கேடயமாக பயன்படுத்தியது, தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்ந்ததை பொறுக்காமல் முஸ்லிம்களை அகதிகளாக விரட்டி அடித்தது, முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமை தொழுகையில் ஒன்று கூடி நின்றபோது அவர்களை மிருக வெறி கொண்டு சுட்டு தள்ளியது, இந்தியாவின் இளம் பிரதமரின் உடலை சிதைத்து சின்னாபின்னப் படுத்தியது இவை எல்லாம் இங்குள்ள தமிழின தலைவருக்கு, தங்க தாரகைக்கு, புரட்சி புயலுக்கு, நாம் தமிழர் என்ற புது முக சீமான்களுக்கு இன்னும் புரட்சி கலைஞர்களுக்கு, மனித நேயம் பேசும் இஸ்லாமிய கட்சி தலைவர்களுக்கு தெரியாது என்றால், அது அவர்களுக்கு இலங்கை சரித்திரம் தெரியாது என்று எடுத்துக் கொள்வதா, அல்லது நிஜங்களை மறைத்து நிழல்களை துதிபாடுகிறார்கள் என்று அவர்கள் பேச்சுக்களை புறம் தள்ளுவதா என்று முராரி அவர்களின் பேட்டியை படிப்பவர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள்.
அவ்வளவு பெரிய படைகளை வைத்திருந்த பிரபாகரனாலேயே தமிழ் ஈழத்தை வென்றெடுக்க முடியவில்லை, கேவலம் ஒரு சில சட்டமன்ற ஆசனங்களுக்காக விலை போகின்றவர்களா, இலங்கை தமிழர்கள் விரும்பாத ஒரு தமிழ் ஈழத்தை அங்கு விதைக்க போகிறார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க பயப்படுபவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போவோம் என்று மார் தட்டுகிறார்கள்.
முராரி அவர்களின் நூலை இந்த அட்டை கத்தி வீரர்களுக்கு இலவசமாக அனுப்பி வையுங்கள். ஏனெனில் இவர்கள் "இலவசங்கள்" அளிப்பதிலும் பெறுவதிலும் மாமன்னர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross