Kashmir is not Eelam posted byAbdul Wahid S. (Kayalpatnam)[29 November 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 31730
Part II
"சட்டசபை தீர்மானத்தில் கண்டுள்ள கோரிக்கைகள் எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராதவை என்பதைத் தெரிந்திருந்தும்......" (C&P)
எது நடைமுறைக்கு ஒத்துவராத தீர்மானங்கள் ? தமிழக சட்டசபை "தனி ஈழம்" உருவாக்கப் படவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றவில்லையே ?. காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக வெளியேற்றவேண்டும் என்று தானே கோரியது!.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றுதானே கோரியது. இவை இரண்டையுமே ஐ.நா. சபை மற்றும் காமன் வெல்த் நாடுகளின் அமைப்பு சக உறுப்பினர் நாடுகள் மீது விதித்துள்ளது என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.
இந்திய அரசு இலங்கை தமிழர்கள் விசயத்தில் வலுவான ஒரு முடிவை எடுத்திருந்தால் இலங்கையை மண்டியிட வைத்திருக்க முடிந்திருக்கும். காரணம் காமன் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை காமன் வெல்த் உறுப்பு நாடுகள் நன்கறியும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு இதுவரை ஒரு வலுவான பிரதமரையோ அல்லது வலுவான அரசையோ நாம் பெறவில்லை என்பது நமது துரதிஷ்டம்.
-------------------------------------
"முதலில் தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் அத்துமீறிய செயல் ஆகும்". (C & P)
பிற நாட்டு உள்விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற கொள்கையை எல்ல நாடுகளும் கடைபிடித்தால், சதாம் ஹுசைன் பிடியில்தான் இன்று வரை இராக் இருந்திருக்கும். லிபியாவும் கடாபியின் கையின் கீழ்தான் தொடர்ந்து சிக்கியிருக்கும். போஸ்னியா முஸ்லிம்கள் கூண்டோடு செர்பியா பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்டிருப்பார்கள்.
ஹிட்லர் பிடியில் ஐரோப்பாவும் ஜப்பானியர்களின் பிடியில் ஆசியாவும் சிக்கி உலக நாடுகளின் வரைபடம் மாறியிருந்திருக்கும். ஏன் வங்காள மொழி பேசக் கூடியவர்களில் பெரும்பாலானோர் இன்று வரை கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் மேற்கு பாகிஸ்தானால் பாகுபடுத்தப் பட்டிருப்பார்கள். தென் ஆப்ரிகா வெள்ளை இன வெறியர்களின் ஆளுமையின் கீழ் தொடர்ந்திருக்கும். இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.
ஒரு நாட்டில் அநியாயம் நடக்கும் பொது வலிமையுள்ள நாடுகள் தலையிட்டு அந்த அநியாயத்திற்கு முடிவு கட்டாமலிருந்தால் ஹிட்லர். முசோலினி, இடி அமீன் போன்ற சர்வாதிகாரிகளின் கையில் சிக்கி இந்த உலகம் சின்னப் பின்னமாகியிருக்கும்.
"காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் தேசிய சபை தீர்மானம் நிறைவேற்றினால் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுதலாகும். தமிழ்நாடு சட்டசபை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் “அது மட்டும் தொப்புள்கொடி உறவா?” என இலங்கை கேட்காதா?" (C & P)
"இலங்கை - இந்திய - ஈழம்" என்ற முக்கோணத்தை "இந்திய - பாகிஸ்தான் - காஷ்மீர்" என்ற முக்கோணத்துடன் ஒப்பிட கட்டுரை ஆசிரியர் முனைத்துள்ளார்.
(பாகிஸ்தான் உலக அரங்கில் இதை செய்ய முயன்று இந்தியாவை தனிமை படுத்தும் முயற்சியில் படு தோல்வியடைந்துள்ளது.)
The two triangles are as different as Chalk and cheese.
1) காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளந்து தனி நாடாக்கி பிறகு தன்னுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் துடிக்கிறது. ஈழ விசயத்தில் அந்த மாதிரியான பகல் கனவு இந்தியாவுக்கு இல்லை.
2) பாகிஸ்தான் காஷ்மீர் மீது உரிமை கொண்டாடுவது போல, இந்திய ஈழம் மீது உரிமை கொண்டாடவில்லை.
3)S.W.R.D. பண்டார நாயக இலங்கை பிரதமராக இருந்த காலத்திலிருந்தே தமிழர்கள் மீது இனப்பாகுபாடு கொள்கையை கடைபிடித்து வந்துள்ளது இலங்கை அரசு. அப்படி ஒரு பாகுபாட்டை இதுவரை காஷ்மீர் மக்கள் மீது இந்திய அரசு நிலைநாட்ட முயற்சிக்கவில்லை. மாறாக மற்ற மாநிலங்களுக்கு இல்லாத தனி அந்தஸ்தை வழங்கியுள்ளது.
(இலங்கையின் பிரச்சனைக்கு அடிப்படி காரணமே இலங்கை அரசு தமிழர்கள் மீது காட்டிய இனப்பாகுபாடுதான்)
4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களை குடியமர்த்தி தமிழர்களை அவர்கள் பகுதியிலேயே சிறுபான்மையினராக ஆக்க அன்றும் இன்றும் இலங்கை அரசு முயற்சி செய்து வந்தது. (குறிப்பாக LTTE யுடன் நடந்த போருக்குப் பின் இந்த கொள்கை தீவிரப் படுத்தப்படுகிறது என்பது International மீடியா வின் குற்றச் சாட்டு).
ஆனால் காஷ்மீரில் பிற இந்திய மாநிலத்தவர்கள் குடியேறி காஷ்மீரிகள் சிறுபான்மையினர்களாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமையை காஷ்மீரிகள் அல்லாத மக்களுக்கு இந்திய அரசு (காஷ்மீர் மன்னருடன் ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படியில்) மறுத்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross