Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[02 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 31771
ஐசிஐசிஐ வங்கி முனைலுள்ள உயர் கோபுர மின் விளக்கு மட்டும் பழுதடைந்து சரியாக 1 வருடமும், புதிய பேருந்து நிலைய முகப்பு வாயலிலுள்ள விளக்கு பழுதடைந்து சரியாக 8 மாதமும் ஆகின்றன...! பல முறை நகர்மன்றத்தில் உள்ள தெரு விளக்கு புகார் புத்தகத்தில் (குறைந்தது 30 தடவை) க்கு மேல் நான் புகார் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை.. ஆகையால் இது விசியமான தகவலை நமது நகராட்சிக்கு RTI மூலம் கேட்டுள்ளேன். அதன் பதிலை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். பதில் வந்த பின் நான் உங்களிடம் (காயல்பட்டணம்.காம் வாசக சகோதரர்களிடம்) பகிர்ந்து கொள்கிறேன்... இன்ஷா அல்லாஹ்...
மேலும் சமீபத்தில் ஒரு இணையதள செய்தியாளரும் சமூக ஆர்வலறுமாகிய ஒரு சகோதரர் அவர் வாரம் வாரம் மக்கள் குறை தீர்க்கும் நாளன்று ஆட்சியர் அலுவலகம் செல்வது வழக்கம். அத்தினத்தன்று காயல்பட்டினம் நகராட்சியின் மீது ஆட்சியரிடம் சில குறிப்பிட்ட குறைகளை (அதில் நகரில் பல இடங்களிலுள்ள உயர் கோபுர மின் விளக்குகளும் அடங்கும்) நேரில் புகார் கொடுத்தாதான தகவல் ஒரு நண்பர் மூலம் அறிந்தேன்..!
நல்ல விசியங்களுக்காக தனது நேரத்தை செலவிடும் அந்த இணையதள செய்தியாளருக்கு எனது கோடான கோடி நன்றிகள்... பாராட்டுகள்... வாழ்த்துக்கள்...
குறிப்பு;- இவர்களுக்கு (காயல்பட்டினம் நகராட்சிக்கு) ஓரே தீர்வு RTI தான்...! அல்லது மக்கள் குறைதீர்க்கும் (மண்டே பெட்டிசன்) மாவட்ட ஆட்சியர் அலுவலகம்தான்...! இன்று நகரில் இதை எத்தனை பேர் செய்கிறார்கள்...? மக்கள் மத்தியில் இது போன்ற நல்ல வழிகளை பரப்புரை மூலம் விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross