மின்சாரம் தடைபடும் நேரம் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[10 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3186
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இப்படி மின் விளக்குகள் பகலில் எரிவதால் மின்சாரம் வீண் விரயமாகிறது. உண்மையாகவே இது நேரக்கட்டுப்பாட்டுக் கருவியில் (டைமர்) ஏற்பட்ட பழுதின் காரணம்தான் என்றால் யார் மீதும் குறை சொல்ல முடியாது.
இருந்தாலும் முறையான பராமரிப்புகள் செய்து வந்தால் இந்த மாதிரி மின்சாரம் வீணாவதை தடுக்கலாம்.
----------------------------------------
எரியாத விளக்கு :
பல வாரங்களாக நெய்னார் தெரு (முஹிய்யதீன் மெட்ரிக் பள்ளிக்கு போகும்) முனையில் விளக்கு எரிவதே இல்லை. அந்த இடத்தில் ரோடு போடுவதற்காக தோண்டப்பட்டு உள்ள பள்ளம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்படாமல் கிடக்கிறது. இருண்டு இருப்பதால் பாதசாரிகள் நடப்பதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் விளக்கு எரிவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
----------------------------------------
மின் வாரியம் :
நமது ஊரில் சுழற்சி முறைப்படி மின்சாரம் தடைபடும் நேரம் இந்த மாதம் முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை .
ஆனால் மின்சார வாரியம் இஷ்டப்பட்ட நேரமெல்லாம் மின்சாரத்தை தடை செய்கிறார்கள்.
நேற்று (புதன் கிழமை) பகல் 1:20 க்கு மின்சாரத்தை நிறுத்தி 4:00 விட்டார்கள்.
இன்று (வியாழன் கிழமை) 12 : 30 க்கு நிறுத்தி 3 : 00 க்கு விட்டார்கள்.
மற்ற நாட்களில் 2 : 00 க்கு நிறுத்திவிடுவது ஆனால் மின்சாரம் வருவதோ 5 :00 அல்லது 4 :45 க்கு.
இப்படியெல்லாம் செய்து மக்களுக்கு சிரமத்தை கொடுப்பது என்பது ஆரோக்கியமன்று.
உண்மையான , அவசர , அவசியமான காரணங்கள் இருக்குமெனில் ஓரிரு முறை திடீர் தடை ஏற்படலாம், அதை மக்கள் சகித்துக் கொள்வார்கள்.
ஆனால் இதை வாடிக்கையாக செய்வார்களானால் மின்சார வாரியம் இதற்கெல்லாம் தக்க பதிலை சொல்ல வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியது வரும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாக. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross