காயல்பட்டினம் புறவழிச்சாலையில் (பை-பாஸ் ரோட்) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முனையிலிருந்து சாலை இறுதி வரை இன்று காலை சுமார் 10.30 மணி வரை தெருவிலுள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. சுமார் 11.00 மணியளவில் அது அணைக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காயல்பட்டினம் மின்வாரியத்தினர், தற்காலத்தில் முன்பு போல ஆட்கள் வந்து தினமும் தெரு விளக்குகளை எரிய விடுவதோ, அணைப்பதோ இல்லை என்றும்,
நகரின் அனைத்துப் பகுதிகளின் தெரு விளக்குகளும் டைமர் (timer) கருவியின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருவதாகவும், தினமும் மாலை 06.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 06.00 மணி வரை விளக்குகள் எரிய விடப்படுவதாகவும்,
நேரக்கட்டுப்பாட்டுக் கருவியில் (டைமர்) ஏதேனும் பழுது காரணமாகவே இது நிகழ்ந்திருக்கும் என்றும், அதை இயக்கும் பொறுப்பு காயல்பட்டினம் நகராட்சியிடமே உள்ளதெனவும் தெரிவித்தனர்.
படம்:
முத்து இஸ்மாஈல்,
ஸ்டார் சாரீஸ்,
பிரதான வீதி, காயல்பட்டினம். |