காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை) அமைப்பின் 19வது பொதுக்குழு கூட்டம் வரும் ஞாயிறு (மார்ச் 13) அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.கே.பீர் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
காயல்பட்டினம் ஐக்கிய சங்க (சென்னை) பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 13-03-2011 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நம்பர் 47, செகண்ட் லைன் பீச் ரோடு (மூர் தெரு, பாரிமுனை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அருகில்), சென்னை - 1 என்ற முகவரியிலுள்ள ஹோட்டல் கல்யாண பவன் பிரியாணி ஹாலில் சங்கத் தலைவர் ஹாஜி ஏ.கே.அப்துல் ஹலீம் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
கீழ்க்காணும் பொருள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்:
1. காயல்பட்டினம் கடற்கரையில் சட்டவிரோதமாக கிரயம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்படும் 169 சுனாமி குடியிருப்புக்கள் சம்பந்தமாக
2. காயல்பட்டினத்தின் எதிர்காலத்தை மனதிற்கொண்டு செய்யப்பட வேண்டிய காரியங்கள்
3. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்
முக்கிய அறிவிப்பு:
1. கூட்டம் முடிந்ததும் பகல் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
2. உறுப்பினர் ஆண்டு சந்தா ரூபாய் 120/- செலுத்தி ரசீது பெற்று கொள்ளவும்
3. கூட்டத்திற்கு வருகை தரும்போது அழைப்பிதழை அவசியம் கொண்டு வரவும்
மேலதிக விபரம் பெற தொடர்பு கொள்ளவும்:
59/29 போஸ்ட் ஆபீஸ் தெரு,
மண்ணடி,
சென்னை - 1.
செல்: 94442 38884 / 90802 29911
இக்கூட்டத்திற்கு தாங்கள் அவசியம் வருகை தந்து அரிய ஆலோசனைகள் வழங்க அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ்,
செயற்க்குழு உறுப்பினர்,
காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் (சென்னை). |