வரும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி கொள்வதாக இன்று மாலை அறிவித்தது. இனி பாராளுமன்றத்தில் பிரச்சனை அடிப்படையில் UPA அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது என திமுக முடிவு எடுத்துள்ளது.
2. தாங்க முடியவில்லை posted byசாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[05 March 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3031
ஆரம்பித்து விட்டங்கய்யா... ஆரம்பித்து விட்டங்கய்யா...
தம்பி முத்துவாப்பா சொன்னது போல தலைவருக்கு பயம். அப்படி ஆதரவு இல்லை என்றால் அருமை மூன்றாம் மனைவி திருமதி தர்மா என்ற இராஜாத்தி அம்மாளும், அன்பு மகள் கனிமொழி அவர்களும் அல்லவா உள்ளே செல்ல வேண்டும்.
கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே.
இந்த இராஜாத்தி அம்மாள், தலைவரை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி திருமணம் செய்து, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த அம்மையார் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. தற்போது இந்த அம்மையாரின் சொத்து என்ன தெரியுமா?
வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம்,
சிஐடி காலனி வீடு,
பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம்,
ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட்,
விலையுயர்ந்த கார்,
மாட மாளிகை, கூட கோபுரம்…..
இது எல்லாம் எப்படி வந்தது. ஒரே தகுதி தலைவரின் மனைவி என்பது மட்டுமே..
பார்ப்போம் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.
(அரசியலுக்கு கமெண்ட்ஸ் எழுத வேண்டாம் என்று கட்டுப்படுத்தி இருந்தாலும் முடியவில்லை, அவ்வளவு காசு அடிக்கின்றார்கள், தாங்க முடியவில்லை) மீண்டும் தொடரலாம்,
3. தமிழக முஸ்லிம்களின் பலம் posted byMohamed Ziyad (Buraidah)[06 March 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3033
தமிழக முஸ்லிம்களின் பலம்
தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்
2. கடலாடி
3. கேயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்தி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை துரைமுகம்
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எக்மோர்
16. சென்னை பூங்காநகர்
17. ராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்.
இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.
ஆனால் நாம் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று சொல்லி சொல்லி தி.மு.க விற்கும் அ.தி.மு.க விற்கும் தானே எல்லா தேர்தலிலும் ஓட்டு போடுகிறோம் ..??????????????????
4. சுரணையற்ற காங்கிரஸ் posted bykavimagan (dubai)[06 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3036
நாயும், நரியும் தின்று முடித்தபின் எலும்பாவது மிஞ்சும். ஆனால் கருணாநிதி கண் வைத்துவிட்டால் கைப்பிடி
மண் கூட மிஞ்சாது.
காங்கிரஸ் துணையோடு ஐந்தாண்டுகால ஆட்சியினை,கரும்பின் அடிப்பாகம் வரை சுவைத்து விட்டு, சக்கையைக் கூட துப்புவதற்கு மனமில்லாமல், குடும்பநலன் என்ற வெறியில் கட்டுன்டு கிடக்கிறார்.
ராமதாசை கூட்டணியில் சேர்க்கவேண்டாம் என்ற சோனியாவின் வேண்டுகோளை அறவே புறக்கணித்த கலைஞர், பா.ம.க.விற்கு 31 இடங்களை வாரி வழங்கியபோதே காங்கிரசை கழற்றிவிடத் தயார் ஆகிவிட்டார்.
இப்போதும் சுரணையற்ற காங்கிரஸ், இந்த வள்ளலின் வாசலுக்கு, இன்று இரவு குலாம்நபி ஆசாத் அவர்களை மீண்டும் பிச்சை எடுக்க அனுப்பி வைக்கிறது.
எது எப்படியாயினும், கருணாநிதி கும்பல், இன்ஷாஅல்லாஹ்
மண்ணைக் கவ்வும் நாள் வெகுதொலைவில் இல்லை.
5. Nangil sambath - speech posted byA.M. Syed Ahmed (Riyadh - KSA)[06 March 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3037
Interesting.
பன்றிகளின் முன்னால் முத்தைச் சிதற விடாதேயுங்கள்; பரிசுத்தமானதை பாவிக்குக் கொடாதேயுங்கள்
நாஞ்சில் சம்பத் ( ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலாளர் ) ஏப்ரல் திங்களில் தமிழகம் சட்டமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
Moderator's Note: வெளியிடப்படும் செய்திக்கு தொடர்புடைய - பிற தளங்களின் கருத்துக்களைத் தர விரும்புவோர் அதற்கான இணைப்பை (link) மட்டும் தந்தால் போதுமானது.
6. மக்களை ஏமாத்தாதிங்க...... posted bySulthan (Sudan)[06 March 2011] IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 3039
மக்களே அடுத்த அதிர்ச்சியான news க்கும் உங்களை தாயார் படுத்தி கொள்ளுங்கள்.... ஆம்... தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க போவார்கள், குலாம் நபி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார். காங்கிரஸ் 60 சீட்டுக்கு ஒப்புக்கொள்ளும். எந்த தொகுதி என்பது முக்கியமில்லை அதை பேசி முடிவெடுத்து கொள்ளலாம் என்பர். அறிக்கை செய்தி தாளில் முதல் பக்கத்தில் வரும். "முறிந்த கூட்டணி மீண்டும் சேர்த்தது" என்று..
ஹ ஹா... ஹ ஹா.. மக்களை ஏமாத்தாதிங்க .... என் தமிழ் மக்கள் இழிச்ச வாயர்கள் அல்ல.....
கூட்டணியை முறித்துக்கொள்ள முடிவெடுத்த உடனே காங்கிரசுக்கு என்று ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளை என்ன செய்ய போகிறீர்கள் என்று அறிவிக்க வேண்டியதுதானே. ஏன் இந்த அமைதி? வருவார்கள் என்ற எதிர்பார்ப்புதானே உங்களுக்கு. உங்கள் தீர்மானத்தை தூக்கி குப்பையில் போட......
7. Arasiyal Sakadai thaan pa posted bySayna (Bangkok )[06 March 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 3042
Thalaivar yaan ipadi oru mudivu pannie irukar,
Yosithu parthaal yan yosanaiel oru sila karuthu,
Intha Election la ADMK and Vijaykath kutu vaithu vittargal,
Ini congress ADmk kuda sarathu, Innum randu katchie irukirathu Congress and BJP Congress nama pecha keykalai da irukavay iruku BJP athoda pangu pottu kirathu thaan
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross