காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை) தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று இடத்தில் கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction of Coastal Communities (VRCC)] கட்டப்பட்டு வரும் 169 குடியிருப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே.
மத்திய அரசின் CRZ Act 1991 விதிகள்படி காயல்பட்டினம் CRZ சட்டத்தின்கீழ் 3வது மண்டலத்தை சார்ந்தது (CRZ 3). இப்பிரிவின் விதிகள்பிரகாரம் கடல் உச்ச அலைகளிலிருந்து (High Tide Line - HTL) 200 மீட்டர் வரை எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி கிடையாது (No Development Zone). 200 மீட்டரிலிருந்து 500 மீட்டர் வரை சில கட்டுப்பாடுகளுடன் கட்டுமான பணிகளுக்கு அனுமதி உண்டு.
தற்போது கற்புடையார் பள்ளி வட்டத்தில் (சிங்கித்துறை) நடைபெறும் கட்டுமானம் கடலிலிருந்து எவ்வளவு தூரத்தில் நடைபெறுகிறது என்பதில் தெளிவற்ற நிலை இருந்தது. இதனை தெளிவுபடுத்தும் முகமாக இன்று சமுக ஆர்வலர்கள் சிலர் கடலிலிருந்து கட்டுமானபணிகள் நடக்கும் தூரத்தை கணக்கிட்டனர்.
அதில் தற்போதைய கட்டுமானங்கள் கடல் உச்ச அலைகளிலிருந்து (High Tide Line - HTL) சுமார் 465 அடி தூரத்தில் இருந்து (ஏறத்தாழ 142 மீட்டர்) துவங்குவதாக அறியப்பட்டது. கட்டுமானபணிகள் கடல் உச்ச அலைகளிலிருந்து (High Tide Line - HTL) சுமார் 880 அடி வரை (ஏறத்தாழ 268 மீட்டர்) நீடிக்கின்றன. CRZ Act 1991 விதிகள்படி No Development Zone என்று அறிவிக்கப்பட்டுள்ள 200 மீட்டருக்குள் (சுமார் 58 மீட்டர் வரை) இக்கட்டுமானங்கள் நடைபெறுகின்றன.
இதுவரை இக்கட்டுமானங்களுக்கு CRZ ஒப்புதல் பெறவில்லை என ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது. தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய அலுவலர் இக்குடியிருப்புக்கான CRZ ஒப்புதலுக்கு தற்போது விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகம் ஜனவரி மாதம் புதிய CRZ விதிகளை (CRZ Notification 2011) அறிவித்தது. இப்புதிய ஆணை மீனவ குடியிருப்புகள் கடல் உச்ச அலைகளிலிருந்து (High Tide Line - HTL) 100 மீட்டர் முதல் கட்டப்படலாம் என விதிவிலக்கு அளிக்கிறது. இருப்பினும் தமிழக அரசு 2011 இல் தான் இக்குடியிருப்புகளுக்கான CRZ ஒப்புதலுக்கு விண்ணப்பித்திருந்தாலும், கட்டுமான பணிகள் 2010 இல் துவங்கியதால் அப்போது நடைமுறையிலிருந்த CRZ Act 1991 சட்ட விதிகளே இக்குடியிருப்பு திட்டத்தினை கட்டுப்படுத்தும்.
மேலும் CRZ Act 1991 விதிகள்படி ரூபாய் ஐந்து கோடிக்கு மேலான திட்டங்களுக்கு மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சக ஒப்புதல் பெறவேண்டும்.
தற்போது சுமார் வீட்டுக்கு ரூபாய் 2.5 லட்சம் என்ற செலவில் கட்டப்படும் 169 குடியிருப்புகள் திட்டம் - நில ஆர்ஜிதம், சாலை மற்றும் இதர பணிகள் சேர்த்து ஐந்து கோடிக்கும் கூடுதலான செலவில் நிறைவேற்றப்படும் திட்டம் ஆகும். இதற்கு இதுவரை மத்திய அரசு ஒப்புதலுக்கு விண்ணப்பித்ததாக தகவல்கள் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross